மாணவர் சீருடைகளை தைக்க Tailorகளை - தலைமை ஆசிரியர் தேர்வு செய்ய உத்தரவு - Director Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2024

மாணவர் சீருடைகளை தைக்க Tailorகளை - தலைமை ஆசிரியர் தேர்வு செய்ய உத்தரவு - Director Proceedings

பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் கடந்த செப்டம்பர் 2022 முதல் நடத்தப்பட்டு , நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பெற்றோர் செயலியில் உள்ளீடு செய்யப்பட்டு வருகிறது . 14.02.2024 வரை பெறப்பட்ட 2,44,234 தீர்மானங்களில் 64,431 தீர்மானங்கள் முடித்துவைக்கப்பட்டுள்ளது.


 பெறப்பட்ட மொத்த தீர்மானங்களில 1369 தீர்மானங்கள் துறைசார்ந்த நலத்திட்டங்கள் , குறிப்பாக மாணவர்களின் சீருடை அளவு சார்ந்தது . எனவே , ஒரு முன்மாதிரி முயற்சியாக குறிப்பிட்ட 50 பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான அளவில் சீருடைகள் தைத்து வழங்குவதை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் உறுதிசெய்ய வேண்டும் . எனவே , பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் முன்னாள் மாணவர்களை தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைத்து இணைப்பு - 1 - இல் கொடுக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட 50 பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தி , கலந்தாலோசித்து மாணவர்களுக்கான சீருடை தைத்தலை சார்ந்த பள்ளிகளே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.


மேலும் மாணவர்களுக்கான சீருடைகளை தைப்பதற்குப் பள்ளி மேலாண்மை குழு , முன்னாள் மாணவர்கள் , சுய உதவிக் குழு அல்லது உள்ளூரில் உள்ள தகுதி வாய்ந்த ஒரு தையல் கலைஞரை ( Tailor ) தேர்ந்தெடுக்க வேண்டும்.

Director Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி