தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க் சென்று, அந்நாட்டு கல்வித் துறை இயக்குநர்களுடன் கலந்துரையாடி, காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து விளக்கினார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க் நாட்டின் கல்வித் துறை இயக்குநரகம் சென்று, அத்துறை சார்ந்த இயக்குநர்களிடம் கலந்துரையாடினார். அப்போது டென்மார்க் நாட்டின் கல்வி வளர்ச்சி பற்றியும், அங்குள்ள வாய்ப்புகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் கல்வித்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். குறிப்பாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்குச் செயல்படுத்தப்படும் காலை சிற்றுண்டித் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம் போன்றவை குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும் அங்குள்ள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது;
”டென்மார்க் நாட்டின் கல்வித் துறை இயக்குநரகம் சென்று, அத்துறை சார்ந்த இயக்குநர்களிடம் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அந்நாட்டில் கல்வி வளர்ச்சி பற்றியும், அங்குள்ள வாய்ப்புகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்கிற முறையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்படும் மாணவர்கள் சார்ந்த திட்டங்கள் குறித்து டென்மார்க் கல்வித்துறை அலுவலர்களிடம் பெருமையோடு எடுத்துரைத்தோம்.
மேலும் புதுமைப் பெண் போன்ற திட்டங்களால் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என்பதையும், உலகத்திற்கே முன்மாதிரியாக திகழும் முதலமைச்சர் காலை சிற்றுண்டித் திட்டத்தின் செயல்முறை குறித்தும் விளக்கினோம்.” இவ்வாறு அன்பில் மகேஷ் பதிவிட்டுள்ளார்.
எந்த நாட்டுக்கு போய் என்ன செய்ய, அங்கெல்லாம் ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் பணியை தவிர்த்து வழங்கப்படும் இதர பணிகள் என்ன என்பதை அறிந்து கொண்டு இங்கு வந்து செயல்படுத்தினால் பரவாயில்லை.....
ReplyDeleteஅந்த நாட்டில் ஆசிரியர் நியமனம் பற்றி அறிவுரையை கேட்டு வரவும்
ReplyDeleteதிராவிட மாடல் அரசு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பி வருவது வரும்கல்வி ஆண்டிலும் நடைமுறைபடுத்துவது கண்டனத்திற்குரியது.
DeleteAnkeyum inkeyum govt posting illa that is the reason ???
ReplyDeletePosting panna 3 years aahudu
ReplyDelete