அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்களை குற்றவாளிகள் போல் கைது செய்வதுதான் சமூகநீதி அரசா? இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் சீமான் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர்கள் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை 243ஐ கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களைச் சரிசெய்ய வேண்டும், உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் துவக்கக்கல்வி ஆசிரியர் பெருமக்களைக் கொடுங்குற்றவாளிகள் போல கைது செய்யும் திமுக அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைத்தானே ஆசிரியர் பெருமக்கள் நிறைவேற்றக் கோருகிறார்கள்? ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் அதைக்கூட திமுக அரசால் நிறைவேற்ற முடியாதா? உரிமை கேட்டு அமைதிவழியில் போராடுவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையாகும். அதைக் கூட அனுமதிக்க மறுப்பதற்குப் பெயர் தான் திராவிட மாடலா?
கருத்துரிமையைக் காலில் போட்டு மிதித்து, போராடும் ஆசிரியர்களை சமூக விரோதிபோலக் கைது செய்வதுதான் சமூகநீதி அரசா? இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? திமுக அரசு, கைது செய்யப்பட்ட ஆசிரியர் பெருமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவித்து, அவர்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
இதற்கு அதிமுக ஆட்சி மேல் என்று கேட்கும் அளவிற்கு உள்ளது இந்த ஆட்சி. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் கலைஞர் ஆட்சி என்று நினைத்து வாக்களித்தோம். நான்காம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் இன்னும் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை.
ReplyDeleteபகுதி நேர ஆசிரியர்கள் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது இந்த ஆட்சியில்.
ReplyDeleteஅரசாணை 243 ஐ பொறுத்தவரை தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளே பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு பணியிடமாறுதல் பெற கொண்டுவரப்பட்ட மிகவும் ஒரு நல்ல அரசாணை தற்போது தொடக்கப்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் சங்கங்கள் இந்த அரசாணை எதிர்ப்பது என்பது முற்றிலும் சுயநலமானது. 10 முதல் 12 ஆண்டுகள் வெளி மாவட்டங்களில் மிகவும் கஷ்டப்பட்டு சிரமப்பட்டு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொடக்க மற்றும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களில் 90% தங்கள் சொந்த மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் பெற்று சென்றுள்ளனர் ஆகவே இந்த அரசாணையை மற்ற ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பது ஆசிரியர்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய அநியாயம் மிகப்பெரிய துரோகம்
ReplyDeleteசுமார் 60ஆண்டுகளாக இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமையை தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த மாண்புமிகு மறைந்த காமராசர்,பக்தவசலம்,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா,எடப்பாடியார் மற்றும் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் போன்றோர்கள் ஏற்காத இக்கோரிக்கையை 5% ஆசிரியர்களுக்காக 243 ஐ கொண்டுவந்து அமுலாக்கியது ஏன்? சிறுபிள்ளைத்தனமான செயல்.5% மட்டும்தான் வாக்காளர்கள் .மீதம் உள்ள 95% வாக்கற்றவர்கள்.காலம்தான் பதில் சொல்லும்.
Deleteஅரசாணை எண் 243 பயன்படுத்தி தென் மாவட்டங்களான கன்னியாகுமரி விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி, கரூர் ராமநாதபுரம் சிவகங்கை போன்ற பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு சென்றுள்ளனர் இது 100% உண்மை ஆகவே இந்த 243 அரசாணையை எதிர்ப்பது என்பது தொடக்க மற்றும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் சுயநலம் மட்டுமே
ReplyDelete