பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனை வழங்க முடியாது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2024

பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனை வழங்க முடியாது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் கடுமையான தண்டனை வழங்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 


கடலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு பணியில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் மனவியல் சார்ந்த பிரச்சனைகளைப் போக்க வாழ்வியல் சார்ந்த புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆய்வில் மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவுக்கு உள்ளது ஆசிரியர்களின் பயிற்சி முறை எவ்வாறு உள்ளது என அறிந்து கொள்ள ஆய்வு பணி நடைபெற்றது.


 இந்த ஆய்வில் பள்ளி உள்கட்டமைப்பு தொடர்பாக சில கோரிக்கை வந்துள்ளது அவை நபார்டு வங்கிகள் மூலம் நிதிகள் பெறப்பட்டு பள்ளிகளுக்கு செயல்படுத்தப்படும். கொரோனா காலத்திற்குப் பின்னர் மாணவர்களை படிப்படியாக வளர்த்தெடுக்கும் சூழல் உள்ளது. மனதளவில் பாதிப்பு உள்ள மாணவர்களை தகுந்த ஆசிரியர்கள் மூலம் 44 வட்டங்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று 800 மருத்துவர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்து கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.திட்டக்குடியில் நடைபெற்ற சம்பவம் வேதனைக்குரியது. மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க முடியாது.


 மனநலம் சார்ந்து தான் திருத்த முடியும் அதுதான் எங்களது கடமை. மாணவர்கள் ஒழுங்கினால் செயல்களில் ஈடுபடும் போது உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்படும். தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயரை இல்லாமல் அனைத்து மாவட்டத்தையும் முன்னேற்ற முயற்சிகள் செய்யப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் நலனுக்காக 67 பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.


 இதையும் தாண்டி ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகிறது இதனை கண்டறிந்து நம் வீட்டுப் பிள்ளைகள் தவறு செய்தால் எவ்வாறு நல்வழிப்படுத்துவோமோ அவ்வாறு நல்வழிப்படுத்துவோம்” என்றார்.

5 comments:

  1. அப்போ எதிர்கால சந்ததி குட்டி சுவருதான் 😭😭

    ReplyDelete
  2. அவனுங்களுக்கு அப்டி நாசமா போனால் தானே கொடி கட்டவும் கோழி பிரியாணிக்கு ஓட்டு போடவும் முட்டாள் வாக்காளன் கிடைப்பான்..

    ReplyDelete
  3. அமைச்சர் அவர்களே! 'மாணவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க முடியாது. நம் வீட்டுப் பிள்ளைகள், தவறு செய்தால், எப்படி திருத்தி நல்வழிப்படுத்துவோமோ? அப்படித்தான் அவர்களையும் வழிநடத்த வேண்டும்'
    என்று பேசி இருக்கிறீர்கள். மிக அற்புதம்.
    ஆனால் அமைச்சர் அவர்களே! எங்கள் வீட்டு பிள்ளைகள் தவறு செய்தால், எங்கள் வீட்டு பெரியவர்கள் அடிப்பதற்கு தயங்க மாட்டோம். தண்டனை கொடுக்க தயங்க மாட்டோம். அந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு மாணவர்களை அடிக்கின்ற உரிமை இருந்த காரணத்தால் மட்டுமே கடந்த தலைமுறை ஒழுக்கத்தோடு வாழ்ந்தது. கையில் கத்தியை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வருகின்ற மாணவன், கழிப்பறை சுவரிலே, தனக்கு கல்வி கற்பிக்கும் தெய்வத்திற்கு சமமான ஆசிரியைகளை, கேவலமாக படம் வரைந்து எழுதும் மாணவன், இந்த மாணவனை கண்டித்தால்,
    உடனே குடும்பத்தோடு பள்ளிக்கு வந்து, ஆசிரியர்களை அடிக்கின்ற பெற்றோர்கள், ஆசிரியர்களை மாணவர்கள் கத்தியால் குத்தினாலும் தண்டனை இல்லை. ஆனால் ஆசிரியர் ஒரு மாணவனை சற்று கடுமையாக கண்டித்தால் உடனே கைது.,
    இதை ஆதரிக்கும் அரசு. இதுபோன்ற நிலையில்,
    இந்த மாணவ சமுதாயம் எப்படி நல்வழியாகும்?
    சிங்கம் படத்தில் வந்த ஒரு சினிமா வசனம்.' ஆசிரியரிடம் பள்ளியில் அடி வாங்காத மாணவன் கண்டிப்பாக காவல்துறையில் அடி வாங்குவான்' என்பதை நினைவூட்டுகிறேன்.
    எனவே தயவு செய்து, மாணவர்கள் தவறு செய்தால், 'கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்' என்ற எண்ணத்தை என்று இந்த அரசு மாணவரகளிடம் கொண்டு செல்கிறதோ அன்றுதான் ஆசிரியர்களுக்கு மரியாதை. மாணவ சமுதாயம் நல்வழிப்படும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி