அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2024

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பள்ளி கட்டிடங்கள், நூலகங்கள் குறித்து கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வுகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

 இதையடுத்து சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் அவர் இன்று காலை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

6 comments:

  1. அமைச்சர் ஆரோக்கியமாக இருக்க எல்லாம் வல்ல ஆண்டவரை
    பிரார்த்தீ ப்போமாக....

    ஆமென்....

    ReplyDelete
  2. கல்வி அமைச்சர் முதல் அமைச்சரிடம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றி விட்டு போக சொல். நாங்களும் தசை உள்ள உயிர்கள்தான் இது எல்லாம் பெரிய விஷியம் இல்லை 😡😡😡😡😡

    ReplyDelete
  3. 2017 ல் எழுதிய சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்,,, நீங்கள் நல்லா இருப்பாங்க,,, 6 வருடங்கள் காத்திருக்கும் ஆசிரியர்

    ReplyDelete
  4. பகுதி நேர ஆசிரியர்களின் வயிற்று எரிச்சல் சும்மா விடாது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி