பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களா? - பள்ளிக் கல்வித்துறை விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2024

பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களா? - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

பள்ளிகளில் 10,000 போலி ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்துவதாக சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது .



7.11.2024 நாளிட்ட செய்தித்தாளில் வெளிவந்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளபடி , தருமபுரி மாவட்டம் , அரூர் கல்வி மாவட்டம் , காரிமங்கலம் ஒன்றியம் இராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்த திரு . K. பாலாஜி என்பார் , தனக்கு பதிலாக வேறொரு நபரைக் கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்தியதால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார் .


 மேற்காணும் பொருள் குறித்து சென்னை - 6 , தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் . 25375 / டி 3 / 2024. நாள் 9.11.2024 ன் - படி . பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு ; ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளாமல் வெளிநபரைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடத்துவது குறித்து , பள்ளி ஆண்டாய்வு மற்றும் பள்ளிப் பார்வையின் போது ஏதேனும் கண்டறியப்பட்டாலோ அல்லது இது குறித்த புகார்கள் ஏதேனும் பெறப்பட்டாலோ கண்டிப்பாக அப்புகார் மீது தனிக்கவனம் செலுத்தி மாவட்டக் கல்வி அலுவலரே ( தொடக்கக் கல்வி ) விசாரணை மேற்கொண்டு . அவ்விசாரணையில் உண்மையிருப்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இறுதியாணை பிறப்பிக்கப்பட வேண்டும்.


 பள்ளிகளில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது அத்தகவலை மாவட்டக் கல்வி அலுவலருக்கு அளிக்கத் தவறும் பட்சத்தில் , தலைமை ஆசிரியர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது . இந்நிலையில் தொடக்கக் கல்வி அலகில் தகுதியுள்ள காலிப்பணியிடத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் ( SMC ) நியமனம் பெற்ற 6053 எண்ணிக்கையில் உள்ள தற்காலிக ஆசிரியர்கள் தவிர , வேறு ஏதேனும் நபர்கள் பணிபுரிந்து வருகிறார்களா என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமும் அறிக்கை கோரப்பட்டது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி