களஞ்சியம் செயலியில் ஆசிரியர்கள் விடுப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
தமிழக அரசு களஞ்சியம் செயலியில் ஆசிரியர்கள் விடுப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர் . இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது : தமிழக அரசு களஞ்சியம் செயலி மூலம் விடுப்பு எடுக்க கட்டாயப்படுத்தியுள்ளது . ஆனால் அந்த செயலியில் விடுப்பு எடுக்க எளிதில் விண்ணப்பிக்க முடியாத அளவுக்கு சிரமமாக உள்ளது . தற்செயல் விடுப்பு , ஈட்டிய விடுப்பு , மருத்துவ விடுப்பு , மத விடுப்புகளுக்கு விண்ணப்பிக்க வழியில்லை . மத விடுப்பு , தற்செயல் விடுப்பு எடுக்க தலைமை ஆசிரியர்கள் அனுமதி கொடுக்க வேண்டும் . மற்ற விடுப்புகளுக்கு தலைமை ஆசிரியர் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் . ஆனால் , தற்போது விடுப்புக்கு விண்ணப்பித்தால் நேரடியாக வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலக உதவியாளருக்கு செல்கிறது . இதனால் விடுப்பு எடுப்பதற்கே விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது . இதனால் ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்கும் , மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர் . எனவே பழைய நடைமுறையை கடைப்பிடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி