வரும் கல்வியாண்டு முதல் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநர் பிரக்யா எம்.சிங், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டங்கள் 2025-26 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரவுள்ளது.
கல்வி உள்ளடக்கம், தேர்வுகளுக்கான பாடத்திட்டம், கற்றல் முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்திட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஆரம்ப பக்கங்களை பள்ளிகள் கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் கூடுதல் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அனுபவ கற்றல், திறன்சார்ந்த மதிப்பீடுகள், இடைநிலை அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து மாணவர்களின் கருத்தியல் புரிதல் மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும்.
புதிய பாடத்திட்டங்களை https://cbseacademic.nic.in/curriculum_2026.html என்ற பக்கத்தில் சென்று பார்த்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
adei aramental pasangala, cbse every year give syllabus for class 9 to 12, not new syllabus, old only, they are not like tn stateboard, they used to add or remove few topics every year based on latest requirements, but not changing all subject
ReplyDelete