10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட பள்ளிக் கல்வித்துறை திட்டமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2025

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட பள்ளிக் கல்வித்துறை திட்டமா?

 

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே அதாவது 8-ந்தேதி வெளியிடப்பட்டது.


அதேபோல், சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும் முன்கூட்டியே வெளியாகுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே தேர்வு அட்டவணை வெளியிட்டபோது, மே மாதம் 19-ந்தேதி (திங்கட்கிழமை) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப்பட்டு இருந்தால் இன்றோ (புதன்கிழமை) அல்லது நாளையோ (வியாழக்கிழமை) அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும். அப்படி இல்லையென்றால், ஏற்கனவே தெரிவித்து இருந்த தேதியில்தான் தேர்வு முடிவு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி