ஆசிரியர் பதவி உயர்வுக்கு பின் கலந்தாய்வு நடத்த கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2025

ஆசிரியர் பதவி உயர்வுக்கு பின் கலந்தாய்வு நடத்த கோரிக்கை

 


பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின் பணிநிரவல், பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் என உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தேனி மாவட்ட தலைவர் மோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.


அவர் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


இதனால் கலந்தாய்வு நடத்த தேவையில்லை. மேலும் 2011 செப்.,27 க்கு முன் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பழைய முறையில் பதவி உயர்வு வழங்கலாம் என்ற நிலை ஏற்பட்டால் அதிக காலிப்பணியிடங்கள் ஏற்படும்.


அதனால் பணிநிரவல், கலந்தாய்வினை உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பின் நடத்த வேண்டும், என்றார்.

3 comments:

  1. அய்யா என்றைக்கு தீர்ப்பு வர என்றைக்கு பதவி உயர்வு வர எப்ப கலந்தாய்வு நடக்க விடியல் அரசு முடிந்து விடும் 2 வருடங்கள் ஆகும்

    ReplyDelete
  2. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்

    ReplyDelete
  3. உச்ச நீதிமன்றமத் தீர்ப்பு 30 நாட்களில் வந்து விடும் என நம்பத் தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி