நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2025

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு

 

இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்​வி​யாண்டு சேர்க்​கைக்​கான நீட் தேர்வு நாளை மதி​யம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறை​யில் நடை​பெறவுள்​ளது. இந்த தேர்​வெழுத நாடு முழு​வதும் சுமார் 22 லட்​சம் பேர் விண்​ணப்​பித்து உள்​ள​தாக கூறப்​படு​கிறது.


நீட் தேர்வு தமிழ், ஆங்​கிலம், இந்​தி, குஜ​ராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்​தம் 720 மதிப்​பெண்​ணுக்கு நடத்​தப்​படும். தேர்வு மையத்​தில் பின்​பற்ற வேண்​டிய நடை​முறை​கள் ஹால்​டிக்​கெட்​டில் தெளி​வாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளன.


அதன்​படி தேர்வு மையத்​துக்​குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்​களுக்கு அனு​மதி தரப்​படும். தேர்​வர்​கள் மையத்​துக்​குள் மதி​யம் 1.30 மணிக்​குள் வந்​து​விட வேண்​டும். அதன்​பின் வருபவருக்கு எக்​காரணம் கொண்​டும் அனு​மதி தரப்​ப​டாது. இதுகுறித்த கூடு​தல் தகவல்​களை http://neet.nta.nic.in என்ற இணை​யதளத்​தில் மாணவர்​கள் அறிந்து கொள்​ளலாம் என்று என்​டிஏ அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி