Breaking : 10ம் மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: முன்கூட்டியே வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2025

Breaking : 10ம் மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்: முன்கூட்டியே வெளியீடு.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் ( மே 16 ) வெளியிடப்படும்.

மார்ச் / ஏப்ரல் 2025 - இல் நடைபெற்ற 2024-2025 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு ( SSLC ) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு ( +1 ) பொதுத்தேர்வு முடிவுகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் 16.05.2025 ( வெள்ளிக்கிழமை ) அன்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் , பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலை 9.00 மணிக்கு வெளியிடப்படப்படவுள்ளது.

 மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் இணையதள முகவரி மற்றும் கால நேரம் பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.



 16 காலை 10 ஆம் வகுப்பு முடிவும் , பிற்பகலில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியீடு.


தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் . பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

மேலும் , பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும் , தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி ( SMS ) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

1 comment:

  1. பி.எட் மற்றும் டீச்சர் ட்ரெயினிங் படித்துள்ள ஆசிரியர்கள் வீட்டுக்கு வீடு இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆட்சியில் இன்னும் ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூட நிரப்ப வில்லை. இடைநிலை ஆசிரியர் நியமனம் ஏதும் செய்ய வில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்ய வில்லை. ஆனால் தேர்தல் வாக்குறுதி அளித்தார். எங்கும் தற்காலிக ஆசிரியர் நியமனம் மட்டுமே செய்கின்றனர். அதிமுக ஆட்சியில் 20000 பணியிடங்களை நிரப்பினார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி