TDS | Form16 | ITR : கடமையும்! உரிமையும்!!
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
அரசு / தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் அலுவலர்கள் தமது ஊழியர்களுக்கான வருமானவரியைக் கணக்கிட்டு பிடித்தம் செய்து 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசிடம் செலுத்துவதும், நிதியாண்டின் இறுதியில் அதற்குண்டான சான்றினை சார்ந்த ஊழியர்களுக்கு வழங்குவதும் இந்திய நிதியமைச்சகத்தின் நிதித்துறைச் சட்டம் 2016ன் கீழ் அடிப்படைக் கடமையாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஊதியம் வழங்கும் அலுவலர் (DDO - Drawing and Disbursing Officer) தனது ஊழியரது நடப்பு நிதியாண்டு வருமானத்தின் அடிப்படையில் வருமானவரியை முன்கூட்டியே (தோராயமாகக்) கணக்கிட்டு, மாதம் தோறும் ஊதியத்தில் பிடித்தம் செய்வதற்கு TDS (Tax Deducted at Source) என்று பெயர்.
அந்த TDS தொகை ஊதியம் வழங்கும் அலுவலரது TANல் (Tax deduction and collection Account Number) மாதம் தோறும் வரவாக்கப்படும். பின்னர் அதிலிருந்து ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியரது PANன் (Permanent Account Number) பெயரில் Form 24Q மூலம் அரசிற்கு செலுத்தப்படும். இதற்கு TDS Return என்று பெயர்.
DDO ஒவ்வொரு காலாண்டிலும் TDS Return செய்தவுடன் அதற்கான தகவல் உடனடியாக சார்ந்த ஊழியரது அலைபேசி எண்ணிற்கு 'VK-ITDEFL' எனும் பெயரில் SMSஆக வந்து சேரும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஊழியர் தமது PAN வழியே I.T வலைப்பக்கத்தில் சென்று Form 26ASல் TDS Return செய்து முடிக்கப்பட்டதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
TDS Return உரிய தேதிக்குள் செய்யப்படவில்லை எனில் U/S.234Eன் படி நாளொன்றிற்கு ரூ.200/- வீதம் DDOவிற்கு அபராதம் விதிக்கப்படும்.
ஜூலை 31, அக்டோபர் 31, ஜனவரி 31 & மே 31 என்ற 4 காலாண்டுகளிலும் முழுமையாக TDS Return செய்து முடித்த பின்னர், அதற்கான சான்றிதழை (TDS Certificate) ஜூன் 15ஆம் தேதிக்குள் DDO தனது ஊழியர்களுக்கு வழங்கிவிட வேண்டும். இந்த TDS Certificateன் பெயர் தான் Form16.
முடிவடைந்துள்ள 2024-25 நிதியாண்டிற்கான TDS Return செய்யப்பட்டுவிட்டதற்கான சான்றிதழ் Form16ஐ தனது ஊழியர்களுக்கு 15.06.2025க்குள் DDO வழங்கியிருக்க வேண்டும்.
அவ்வாறு வழங்கத் தவறும் பட்சத்தில் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் U/S.272A(2)(g)ன் படி ரூ.100/- வீதம் DDO அபராதம் செலுத்தியாக நேரிடும்.
மேலும், ஒவ்வொரு ஊழியருக்குமான Form16 படிவத்தினை DDO தனது TAN மூலம் TRACES (TDS Reconciliation Analysis and Correction Enabling System) என்னும் I.T துறையின் வலைப் பக்கத்தில் இருந்து தரவிறக்கம் செய்து மட்டுமே வழங்க வேண்டும். (வேறுவகையில் எழுதியோ / Type செய்தோ வழங்கும் படிவங்கள் செல்லத்தக்கதல்ல.)
அவ்வாறு வழங்கப்படும் Form16 என்பது Part A & Part B எனும் இரு பிரிவுகளைக் கொண்டது. Part A என்பது காலாண்டு வாரியான TDS Return செய்யப்பட்டதற்கான Challan விபரங்களுடன் இரண்டு பக்கங்களில் இருக்கும். Part B என்பது ஊழியர் வழங்கும் I.T படிவத்தின் அனைத்து விபரங்களுடன் (Income, Deductions, Tax Calculation & Paid Details) இருக்கும்.
[ஊழியர்களின் எண்ணிக்கை மிகுதி காரணமாகப் பெரும்பான்மையான அலுவலகங்களில் Part A மட்டுமே வழங்கப்படுகிறது.]
DDO தனது ஊழியர்களுக்கு குறித்த தேதியில் Form16 வழங்குவது சட்டப்படி கடமையாக்கப்பட்டுள்ளது போல, ஊழியர்கள் தமது DDOவிடம் இருந்து Form 16னைப் பெற்றுக் கொள்வதும் சட்டப்படியான அடிப்படை உரிமை.
மேலும், இதன் நிறைவுப் பணியாக Tax வந்தாலும் வராவிட்டாலும் Form16 அடிப்படையில் ஊழியர் தமது வருமானவரிக் கணக்கினை தனது PAN மூலம் I.T வலைப்பக்கம் வாயிலாக அரசிடம் சமர்ப்பிப்பது ஊழியரது அடிப்படைக் கடமையாகும். இதனைத் தான் I.T Return (IT-R) என்கிறோம்.
PAN எண் உள்ள ஒவ்வொருவரும் தமது ஆண்டு வருமானம் & வரி விபரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமானவரித் துறையின் இணையப் பக்கத்தில் பதிவேற்றி I.T Returnஐ நிறைவு செய்ய வேண்டும். இவ்விபரங்கள் DDO வழங்கும் Form16-வுடன் ஒத்துப்போக வேண்டும்.
ஊதியமில்லாத இதர வருமானங்கள் PAN பயன்பாட்டின் வழியே ITRன் போது Income From Other Sourcesல் தானியங்கி முறையில் சேர்க்கப்பட்டு காண்பிக்கும். இத்தொகையைச் சேர்ப்பதால் கூடுதலாக வரி கட்ட வேண்டி இருப்பின் ITRன் போதே onlineல் செலுத்திக் கொள்ளலாம்.
ஜூலை 31ஆம் தேதிக்குள் ITR செய்யவில்லை எனில், 5 லட்சத்திற்குக் கீழ் வருமானமுள்ளோருக்கு ரூ.1,000/-மும் அதற்கு மேலுள்ளோருக்கு ரூ.5,000/-ம் U/S.234Fன் படி தாமதக் கட்டணமாக வசூலிக்கப்படும். அதே போன்று தாமதமாக ITR செய்யும் நேர்வுகளில் மேலே கூறியபடி வரியும் கூடுதலாகக் கட்ட வேண்டியதாக இருந்தால், வரியில் 1%ஐ வட்டியாக தாமதமான ஒவ்வொரு மாதத்திற்கும் U/S.234Aன் படி செலுத்தியாக வேண்டும்.
நடப்பு ஆண்டில் கூடுதல் விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் 2024-25 நிதியாண்டிற்கான I.T Return செய்ய 15.09.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
[I.T Return குறித்து மற்றொரு பதிவில் விரிவாகப் பகிர்கிறேன்.]
நடைமுறையில், 99.9% DDOக்களுக்கு காலாண்டு வாரியான TDS Return செய்து இறுதியில் Form16 வழங்குவதற்கேற்ற பயிற்சிபெற்ற அலுவலகப் பணியாளர்கள் இருப்பதில்லை. இதன் காரணமாக இப்பணியை வெளி நபர்களை வைத்து மேற்கொண்டு அதற்கான செலவினை ஊழியர்களிடமிருந்தே பெற்று வழங்கி வருகின்றனர். வருமானவரித்துறையின் அறிவுறுத்துதல் படி இது தவறான நடைமுறையாகும். அலுவலகப் பணியாளர்களுக்கு TDS Return செய்வதற்கான பயிற்சிகளை வழங்கிட வருமானவரித்துறை தயாராகவே உள்ளது.
இப்பணிகளுக்கான முக்கியத்துவம் & தேவையை உணர்ந்து அலுவலகந்தோறும் போதுமான பயிற்சி பெற்ற ஊழியர்கள் எப்போதும் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய ஆசிரியர் - ஊழியர் - அலுவலர் சங்கங்களின் 99.9% பொறுப்பாளர்கள் இது குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையால் மேற்படி சட்டப்பூர்வ உரிமையை காக்க ரூ.100/- முதல் ரூ.1000/- வரை கட்டணமாக ஊழியர்களிடம் இருந்து பெற்றுத் தரும் முகவர்களாகத்தான் செயல்பட்டு வருகின்றனர். விதிவிலக்காக அரசின் விதிமுறையைச் சரியாகச் செயல்படுத்தும் சங்கப் பொறுப்பாளர்கள் சொற்பமே.
IFHRMS இதனையும் எளிதாக்கிட வரும் காலங்களில் வாய்ப்புள்ளது, பார்க்கலாம். . .!
கற்போம்! கற்பிப்போம்!!
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி