எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு தேதி அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2025

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு தேதி அறிவிப்பு.

 

பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான அகில இந்​திய கலந்​தாய்வு ஜூலை 21-ம் தேதி ஆன்​லைனில் தொடங்​கு​கிறது.


எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்வி ஆண்​டில் மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்வு ஆன்​லைனில் வரும் 21-ம் தேதி தொடங்​கு​கிறது.


இதுகுறித்து மருத்​துவ கலந்​தாய்வு குழு வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான முதல் சுற்று கலந்​தாய்வு https://mcc.nic.in என்ற இணை​யதளத்​தில் ஜூலை 21-ம் தேதி தொடங்​கு​கிறது.


நீட் தேர்​வில் தகுதி பெற்ற மாணவ, மாணவி​கள் இந்த இணை​யதளத்​தில் வரும் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி நண்​பகல் 12 மணிக்​குள் பதிவு செய்யவேண்​டும். 28-ம் தேதி பிற்​பகல் 3 மணி வரை கட்​ட​ணம் செலுத்தலாம். 22-ம் தேதி முதல் 28-ம் தேதி நள்​ளிரவு 11.55 மணி வரை இடங்​களை தேர்வு செய்​ய​லாம்.


தரவரிசை பட்​டியல் அடிப்​படை​யில் 29, 30-ம் தேதி​களில் கல்​லூரி​களில் இடங்​கள் ஒதுக்​கப்​படும். அதன் விவரங்​கள் 31-ம் தேதி வெளி​யிடப்​படும். டஒதுக்​கீடு பெற்ற கல்​லூரி​களில் ஆகஸ்ட் 1 முதல் 6-ம் தேதிக்​குள் சேர வேண்​டும். சான்​றிதழ் சரி​பார்ப்பு பணி​கள் ஆகஸ்ட் 7, 8-ம் தேதி​களில் நடை​பெறும்.


2-ம் சுற்று கலந்​தாய்வு ஆகஸ்ட் 12-ம் தேதி​யும், 3-ம் சுற்று கலந்​தாய்வு செப்​டம்​பர் 3-ம் தேதி​யும் தொடங்​கும். 3 சுற்று கலந்​தாய்வு முடி​வில் காலி​யாக உள்ள இடங்​களை நிரப்​புவதற்​கான கலந்​தாய்வு செப்​டம்​பர் 22-ம் தேதி தொடங்​கும்.


புனே ராணுவ கல்​லூரி​யில் உள்ள பிஎஸ்சி நர்​சிங் படிப்​புக்கு நீட் தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடை​பெறு​வ​தால், அந்த இடங்​களுக்​கும் மேற்​கண்ட தேதி​களில் கலந்​தாய்வு நடை​பெறும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.


மாநில கலந்தாய்வு: தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​களில் இருக்​கும் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களில் 15 சதவீதம் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு ஒதுக்​கப்​படு​கிறது. மீத​முள்ள 85 சதவீத இடங்​கள், தனி​யார் மருத்​துவ கல்​லூரி​களில் உள்ள அரசு மற்​றும் நிர்​வாக ஒதுக்​கீட்டு இடங்​களுக்​கான மாணவர் சேர்க்கை கலந்​தாய்வு இந்த மாதம் இறு​தி​யில் தொடங்​க​வுள்ளது.


மொத்​த​முள்ள 11,350 மருத்​துவ இடங்​களுக்கு நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்ற 62 ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட மாணவர்கள் விண்​ணப்பித்​துள்​ளனர். விண்​ணப்​ப​தா​ரர்களின் நீட் மதிப்​பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்​படை​யில் தரவரிசை பட்​டியல் தயாரிக்​கப்​படு​கிறது. விரைவில் தரவரிசை பட்​டியல் வெளி​யிடப்​பட​வுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி