கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 15, 2025

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

 

கால்​நடை மருத்​துவ படிப்​பு​களுக்​கான தரவரிசை பட்​டியல் ஆன்​லைனில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. 57 பேர் கட்​-ஆப் மதிப்​பெண் 200-க்கு 200 எடுத்து சாதனை படைத்​துள்​ளனர். அடுத்த வாரம் கலந்​தாய்வு தொடங்​கு​கிறது.


தமிழ்​நாடு கால்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகத்​தின்​கீழ் சென்​னை, நாமக்​கல், திருநெல்​வேலி, ஒரத்​த​நாடு, சேலம் தலை​வாசல், உடுமலைப்​பேட்​டை, தேனி வீரா​பாண்டி ஆகிய 7 இடங்​களில் உள்ள கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​களில் ஐந்​தரை ஆண்​டு​கள் கொண்ட கால்​நடை மருத்​து​வம் மற்​றும் பராமரிப்பு படிப்​புக்கு (பி.​வி.எஸ்​சி. - ஏ.ஹெச்) 660 இடங்​கள் இருக்​கின்​றன.


இதில், சென்​னை, நாமக்​கல், திருநெல்​வேலி, ஒரத்​த​நாடு ஆகிய 4 கல்​லூரி​களில் உள்ள 420 இடங்​களில் மட்​டும் அகில இந்​திய ஒதுக்கீட்​டுக்கு 15 சதவீதம் இடங்​கள் ஒதுக்​கப்​படு​கின்​றன. மீதம் தமிழகத்​துக்கு 597 இடங்​கள் உள்​ளன. திரு​வள்​ளூர் மாவட்​டம் கோடு​வேளி​யில் உள்ள உணவு மற்​றும் பால்​வளத் தொழில்​நுட்ப கல்​லூரி​யில் உணவுத் தொழில்​நுட்ப பட்​டப் படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள், பால்​வளத் தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்) 20 இடங்​கள் இருக்​கின்​றன.


இதில், உணவுத் தொழில்​நுட்ப படிப்​பில் 6 இடங்​கள் மற்​றும் பால்​வளத் தொழில்​நுட்ப படிப்​பில் 3 இடங்​கள் அகில இந்​திய ஒதுக்​கீட்டுக்கு வழங்​கப்​படு​கிறது. இதே​போல், ஓசூர் மத்​தி​கிரி​யில் உள்ள கோழி​யின உற்​பத்தி மற்​றும் மேலாண்மை கல்​லூரி​யில் கோழி​யின தொழில்​நுட்ப பட்​டப்​படிப்​புக்கு (பி.டெக்) 40 இடங்​கள் உள்​ளன. இந்த 3 பட்​டப்​படிப்​பு​களும் 4 ஆண்​டு​கள் கொண்​டது.


பிளஸ் 2 மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடை ​பெறும் பி.​வி.எஸ்சி - ஏ.ஹெச் படிப்​புக்கு 20,516 பேரும், பி.டெக் படிப்பு​களுக்கு 5,028 பேரும் விண்​ணப்​பித்​தனர். விண்​ணப்​பங்​கள் பரிசீலனை செய்​யும் பணி​கள் முடிவடைந்​ததை தொடர்ந்​து, தகு​தி​யானவர்​களின் தரவரிசை பட்​டியல் https://adm.tanuvas.ac.in/ என்ற பல்​கலைக்​கழகத்​தின் இணை​யதளத்​தில் நேற்று வெளியிட்டப்​பட்​டது.


பி.​வி.எஸ்​சி. - ஏ.ஹெச் படிப்​புக்​கான தரவரிசை பட்​டியலில் 57 பேர் கட்​-ஆப் மதிப்​பெண் 200-க்கு 200 பெற்​றுள்​ளனர். விழுப்​புரம் மாவட்​டத்தை சேர்ந்த மாணவி ஜி.​திவ்​யா, பெரம்​பலூர் கே.கமலி, கடலூர் மாவட்​டத்தை சேர்ந்த எம்​.இ.அம்தா மெக​தாப், எம்​.​பார்​க​வி, ஐ.இலக்​கியா ஆகியோர் முதல் 5 இடங்​களை பிடித்​துள்​ளனர். பிடெக் தரவரிசை பட்​டியலில் கடலூர் மாவட்​டத்தை சேர்ந்த எம்​.​பார்​க​வி, ஆர்​.பிர​வீ​னா, பி.​கார்த்​தி​கா, எம்​.மெர்​லீன் ஆகியோர் கட்​-ஆப் மதிப்​பெண் 200-க்கு 200 பெற்று முதல் நான்கு இடங்​களை பிடித்​துள்​ளனர்.


கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்தை சேர்ந்த எல்​.லூ​யிஸ் அர்​னால்டு (கட்​-ஆப் மதிப்​பெண் 199.5) 5-வது இடத்தை பிடித்​துள்​ளார்.பி.​வி.எஸ்​சி. - ஏ.ஹெச் படிப்​பில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டின் கீழ் அரசு பள்ளி மாணவர்​களுக்கு 45 இடங்​கள் மற்​றும் பிடெக் படிப்​பு​களில் 8 இடங்​கள் உள்​ளன. பி.​வி.எஸ்​சி. - ஏ.ஹெச் மற்​றும் பி.டெக் படிப்​பு​களுக்​கான மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்வு அடுத்த வாரம் தொடங்​கு​கிறது. சிறப்பு பிரிவு மற்​றும் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டின் கீழ் அரசு பள்ளி மாணவர்​களுக்​கான கலந்​தாய்வு நேரடி​யாக​வும், பொது பிரிவுக்​கான கலந்​தாய்​வு ஆன்​லைனிலும்​ நடை​பெறவுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி