''பள்ளிகளில் உடற்கல்வி பயிற்சி வகுப்பை, மற்ற ஆசிரியர்கள் கடன் கேட்கக்கூடாது,'' என, ஆசிரியர்களை துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார்.
கடந்த, 2024 - 25ம் கல்வியாண்டில், சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற, 5,788 மாணவ --- மாணவியருக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவில் சான்றிதழ்கள் வழங்கி, துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண, இத்தகைய விழா கைகொடுக்கிறது. பாடப் புத்தகத்தின் வழியே கிடைக்கும் கல்வி மட்டும் கல்வி அல்ல. விளையாட்டிலும் கல்வியை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும்.
ஒத்துழைப்பு, குழுப்பணி, நம்பிக்கை, நட்பு, உத்தி, திட்டமிடல், செயல் படுத்துதல் என, வாழ்க்கைக்கு தேவையான பாடத்தையும் விளையாட்டு கற்று தரும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி