தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பான தனியார் பள்ளிகள் இயக்குனரின் பரிந்துரையை பரிசீலிக்குமாறு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் பழனியப்பன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 1994ம் ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், அந்த உத்தரவை அமல்படுத்தாமல் தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்கபட்டு வருகிறது. இதை எதிர்த்து கடந்த 2021ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிரந்தர அங்கீகாரம் வழங்கும் வகையில் 1994ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்துமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு பதிலாக நிரந்தர அங்கீகாரம் வழங்கும் அரசாணையை, எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு திரும்ப பெற்று கொண்டது.
அதன்பிறகு, 2024ம் ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இது சட்ட விரோதமானது. இதுபோல குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயிக்க எந்த அவசியமும் இல்லை என்பதால் நிரந்தர அங்கீகாரம் வழங்கக் கோரி கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நீண்ட காலமாக இயங்க கூடிய பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் தனியார் பள்ளிகள் இயக்குனர் பரிந்துரை அளித்தார்.
அந்்த பரிந்துரையை பரீசிலீத்து நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், கல்வித்துறை செயலாளர் மற்றும் தனியார் பள்ளி இயக்குனர் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார். இதேபோல, கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், ஆரம்ப பள்ளிகளை நடுநிலை பள்ளியாக உயர்த்துவது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி குமரப்பன், ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி