அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய குறும்படங்கள் ஒளிபரப்பு: பள்ளிக் கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2025

அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய குறும்படங்கள் ஒளிபரப்பு: பள்ளிக் கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு

 

அரசுப் பள்ளி மாணவர்​கள் உரு​வாக்​கிய சிறந்த 10 குறும்​படங்​களை தொகுத்து பள்​ளி​களில் ஒளிபரப்பு செய்வதற்கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக்​கல்​வித் துறை தற்​போது வெளி​யிட்​டுள்​ளது.


இதுகுறித்து பள்​ளிக் கல்வி இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்​தில் 2022-23-ம் கல்​வி​யாண்டு முதல் அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்​படங்​கள் அவ்​வப்​போது திரை​யிடப்​பட்டு வரு​கின்​றன. இது மாணவர்​களின் படைப்​பாற்​றல், கற்பனை மற்​றும் விமர்​சிக்​கும் திறன் உள்​ளிட்ட அம்​சங்​களை மேம்​படுத்த தூண்​டு​கோலாக அமை​கிறது.


அந்​தவகை​யில் நடப்பு கல்​வி​யாண்​டில் (2025-26) முதல் சிறார் திரைப்​படம் இந்த ஜூலை மாதம் திரை​யிடப்பட உள்​ளது. கடந்தாண்டு மாநில அளவி​லான சிறார் திரைப்பட போட்​டிகளில் பங்​கேற்ற மாணவர்​கள் தயார் செய்த குறும்​படங்​களில் சிறந்த 10 படங்​கள் தொகுக்​கப்​பட்டு திரை​யிடப்பட இருக்​கிறது.


இந்த படங்​கள் நட்பு என்​றால் என்ன, நூல​கம் என்ன செய்​யும், ஊனம் ஒரு தடையல்ல, இயற்​கையை நேசிப்​போம், படித்​தால்​தான் உயர​முடி​யும், அனை​வரின் உழைப்​பும் அங்​கீகரிக்​கப்பட வேண்​டும் என்று பரந்த பார்​வை​யில் ஒரே நாளில் யோசித்து இயக்கி படத்​தொகுப்பு செய்து இனிமை​யான இசை கோர்ப்​போடு தந்த இந்த படைப்​பு​களாகும்.


இவை அனைத்​தும் திரைத்​துறையைச் சேர்ந்த இயக்​குநர்​கள், படத்​தொகுப்​பாளர்​கள் மத்​தி​யில் திரை​யிடப்​பட்டு சிறந்த நடிகர், சிறந்த இயக்​குநர் என பல்​வேறு விருதுகள் வழங்​கப்​பட்​டுள்​ளன. சிறார் திரைப்பட மன்​றம் சார்ந்த செயல்​பாடு​கள் அனைத்​தும் பிற மன்​றச் செயல்​பாடு​களைப் போல் மகிழ் முற்​றம் மாணவர் குழுக்​கள் மூல​மாக செயல்​படுத்​தப்பட வேண்டும்.


இந்த படத்தை ஒளிபரப்பு செய்​வதற்​கான இணைப்பு லிங்க் பள்​ளி​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது. அதற்​குரிய பாட​வேளை​யில்​உரிய வழி​காட்​டு​தல்​களை முழு​மை​யாக பின்​பற்றி படத்தை மாணவர்​களுக்கு திரை​யிட்டு காண்​பிக்க வேண்​டும். இந்த பணிகளை கண்​காணித்து ஒருங்​கிணைக்க பள்​ளி​களில் பொறுப்​பாசிரியர்​களை நியமிக்க வேண்​டும்​. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி