ஐஐடி திருப்பதி, ஐஐடி பாலக்காடு உட்பட 5 ஐஐடி கல்வி நிறுவனங்களில் புதிதாக 1,300 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து மத்திய கல்வித் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: 2025-26-ம் கல்வியாண்டில் 5 ஐஐடி கல்வி நிறுவனங்களில் 1,364 இடங்கள் புதிதாக சேர்க்கப் பட்டு உள்ளன. இதன்படி ஐஐடி பிலாய் கல்வி நிறுவனத்தில் 378 இடங்கள், ஐஐடி தார்வாட் கல்வி நிறுவனத்தில் 343 இடங்கள், ஐஐடி ஜம்மு கல்வி நிறுவனத்தில் 251, ஐஐடி திருப்பதி கல்வி நிறுவனத்தில் 199, ஐஐடி பாலக்காடு கல்வி நிறுவனத்தில் 193 இடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.
2025-26-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், ஐஐடி கல்வி நிறுவனங்களில் புதிதாக 6,500 இடங்கள் சேர்க்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதன்படி 2014-ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட ஐஐடி கல்வி நிறுவனங்களில் தேவைக்கேற்ப புதிய இடங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 2015, 2016-ம் ஆண்டுகளில் பாலக்காடு, பிலாய், ஜம்மு, தார்வாட், திருப்பதியில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இந்த கல்வி நிறுவனங்களின் பரிந்துரைகளை ஏற்று இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளில் புதிய இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த 5 கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு, விரிவாக்க பணிகளுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.11,828 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் 5 கல்வி நிறுவனங்களும் படிப்படியாக மேம்படுத்தப்படும்.
இவ்வாறு மத்திய கல்வித் துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி