TNPSC - தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 28, 2025

TNPSC - தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் அழைப்பு

 

டிஎன்​பிஎஸ்சி தேர்வு எழுதும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள் சென்​னை​யில் நடை​பெற்று வருவ​தாக​வும், தகு​தி​யுள்ள மாற்​றுத்திற​னாளி​கள் வகுப்​பு​களில் பங்​கேற்று பயனடை​யு​மாறும் மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே அழைப்பு விடுத்​துள்​ளார்.


தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) சார்​பில் அனைத்து வகை மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்கு நடத்தப்​படும் குரூப்​-2, 2ஏ தேர்​வுக்​கான இலவச பயிற்சி வகுப்​பு​கள், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான சிறப்பு வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில்​நெறி வழி​காட்​டும் மையத்​தின் மூலம் கடந்த 21-ம் தேதி​முதல் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது.


சென்னை மயி​லாப்​பூரில் உள்ள சிஎஸ்ஐ காது கேளாதோர் மேல்​நிலைப் பள்​ளி​யில் திங்​கள் முதல் வெள்​ளிக்​கிழமை வரை காலை 10 முதல் மதி​யம் 1 மணிவரை பயிற்சி வழங்​கப்​படு​கிறது. டிஎன்​பிஎஸ்சி குரூப்​-2, 2ஏ தேர்​வுக்கு விண்​ணப்​பிக்க வேண்​டிய கடைசி நாள் ஆக. 13-ம் தேதி​யாகும்.


பட்​டப்​படிப்பு முடித்​தவர்​கள் விண்​ணப்​பிக்​கலாம். அந்த வகை​யில் சென்​னையை சேர்ந்த தகு​தி​வாய்ந்த அனைத்து வகை மாற்றுத்திற​னாளி மாணவ, மாணவி​கள் இணைய வழி​யில் தேர்​வுக்கு விண்​ணப்​பித்த விண்​ணப்​பப்​படிவ நகலுடன், ஆதார் அட்டை நகல், புகைப்​படம் ஆகிய​வற்​றுடன் பயிற்​சி​யில் பங்​கேற்று பயனடைய​லாம் என மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார். பயிற்​சிக்கு கட்​ட​ணமில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி