10-ம் வகுப்பு துணைத் தேர்வு விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2025

10-ம் வகுப்பு துணைத் தேர்வு விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கலாம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

 

கடந்த ஜூலை மாதம் நடை​பெற்ற எஸ்​எஸ்​எல்சி துணைத் தேர்​வின் விடைத்​தாள் நகல் கோரி விண்​ணப்​பித்த மாணவர்கள் அந்​நகலை இன்று (வி​யாழக்​கிழமை) பிற்​பகல் முதல் ஆன்​லைனில் பதி​விறக்​கம் செய்​ய​லாம் என அரசு தேர்​வுத்​துறை அறி​வித்​துள்​ளது.


இதுதொடர்​பாக அரசு தேர்​வு​கள் இயக்​குநர் ந.லதா நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: 10-ம் வகுப்பு துணை தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்​தது. அத்​தேர்​வெழுதி விடைத்​தாள் நகல் கோரி விண்​ணப்​பித்த மாணவர்​கள் விடைத்​தாள் நகலை ஆகஸ்ட் 14 (இன்​று) பிற்​பகல் முதல் அரசு தேர்​வுத்​துறை​யின் இணை​யதளத்​தில் (www.dge.tn.gov.in) பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். அப்​போது, தங்​கள் பதிவெண் மற்​றும் பிறந்த தேதியை குறிப்​பிட வேண்​டும்.


மறுகூட்​டல் அல்​லது மறும​திப்​பீட்​டுக்கு விண்​ணப்​பிக்க விரும்​புவோர் அதற்கான விண்​ணப்​பத்தை மேற்​குறிப்​பிட்ட இணையதளத்தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். பூர்த்தி செய்த விண்​ணப் ​பத்​தின் இரு நகல்​கள் எடுத்து ஆகஸ்ட் 18 மற்​றும் 19-ம் தேதி சம்​பந்​தப்​பட்ட மாவட்ட அரசு தேர்​வு​கள் உதவி இயக்​குநர் அலு​வல​கத்​தில் அலு​வலக நேரத்​தில் சமர்ப்​பிக்க வேண்​டும்​.


புதிய மாவட்டங்கள்: மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீட்​டுக் கட்​ட​ணத்தை அங்கேயே பணமாக செலுத்த வேண்​டும். புதி​தாக தொடங்​கப்​பட்ட தென்​காசி, ராணிப்​பேட்​டை, திருப்​பத்​தூர், கள்​ளக்​குறிச்​சி, செங்​கல்​பட்​டு, மயி​லாடு​துறை ஆகிய மாவட்​டங்​களைச் சேர்ந்​த மாணவர்​கள் மறுகூட்டல் மற்​றும் மறும​திப்​பீட்டு விண்​ணப்​பத்தை சம்​பந்​தப்​பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலு​வலர் அலு​வல​கத்​தில் சமர்ப்​பித்து கட்​ட​ணத்​தை​யும் பணமாக அங்​கேயே செலுத்​தலாம்.

இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி