எதிர்கால சவால்களுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தும் வழிகாட்டியே மாநிலக் கல்விக் கொள்கை: பள்ளிக் கல்வி செயலர் நேர்காணல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 14, 2025

எதிர்கால சவால்களுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்தும் வழிகாட்டியே மாநிலக் கல்விக் கொள்கை: பள்ளிக் கல்வி செயலர் நேர்காணல்

 

மாநிலக் கல்விக் கொள்கையானது 21-ம் நூற்​றாண்​டின் சவால்​களை கையாள்​வதற்​கேற்ப திறனுள்ள மாணவர்​களை ஆயத்​தப்​படுத்​தும் வழி​காட்​டி​யாகும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் தெரி​வித்​தார். இதுதொடர்​பாக அவர் ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அளித்த பிரத்​யேக நேர்​காணல்:


மாநில கல்விக் கொள்​கை​யின் தற்​போதைய தேவை மற்​றும் நோக்​கம் என்ன? - முதல்​முறை​யாக மாநிலத்​துக்​கென தனி கல்விக் கொள்​கையை கொண்டு வந்​துள்​ளோம். தற்​போதைய நவீன கால​கட்​டத்​தில் பல்​வேறு மாற்​றங்​களை காண​முடிகிறது. அறி​வியல் உட்பட அனைத்து துறை​களி​லும் புதிய அம்​சங்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன.


அதே​போல், உலகள​விலும் தொழில்​நுட்​பம் சார்ந்த விஷ​யங்​கள் மாறிவரு​கின்​றன. தற்​போது செயற்கை நுண்​ணறிவு (ஏஐ), ரோபோட்​டிக்ஸ் போன்​றவை அனைத்து துறை​களி​லும் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளன. நாம் இவ்​வளவு காலம் செய்​து​வந்த விஷ​யங்​களை மிக விரை​வாக​வும், திறம்​பட​வும் செய்து சவாலாக திகழ்​கின்​றன. அதற்​கேற்ப பள்​ளி​களில் வழங்​கப்​படும் கல்​வி​யானது அடுத்த 20 ஆண்​டு​களுக்கு பின்​னரும் மாணவர்​களுக்கு பயனுள்​ள​தாக இருக்க வேண்​டும்.


வளரும் தொழில்​நுட்​பங்​கள், மாறிவரும் சமூக பொருளா​தார மாற்​றங்​கள், புதிய திறன் தேவை​கள், சமூக நீதியை நிலை நாட்டுதல் உள்​ளிட்ட அம்​சங்​களுக்கு ஏற்ப நமது மாணவர்​களை எப்​படி தயார் செய்ய வேண்​டும் என்​ப​தற்​கான தெளி​வான வழிகாட்டுதல் தேவை.


.


அதை எப்​படி செயல்​படுத்​தப் போகிறோம் என்​ப​தற்​காக​தான் ஒரு கல்விக்​கொள்​கையை கொண்டு வந்​துள்​ளாம். இது 3 ஆண்டுகளுக்கு ஒரு​முறை மறு​பரிசீலனை செய்​யப்​பட்டு புதுப்​பிக்​கப்​படும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.


மாநிலக் கல்விக் கொள்​கை​யின் சிறப்பு அம்​சங்​கள் என்ன? - முதலில் மாணவர்​களின் கற்​றல் திறனை மேம்​படுத்த வேண்​டும். இதற்கு மாணவர்​களிடம் நடத்​தப்​பட்ட ஸ்லாஸ் தேர்வு முடிவு​கள் உதவி​கர​மாக இருக்​கின்​றன. அதன் அடிப்​படை​யில் மாணவர்​கள் கற்​றல் திறனை வலுப்​படுத்​துதல், பொறி​யியல், மருத்​து​வம் என அவர்​கள் விரும்​பும் துறை​களுக்கு செல்ல வழி​காட்​டு​தல் வழங்​குதல் மற்​றும் போட்டி நிறைந்த உலகத்தை எதிர்​கொள்ள தயார்​படுத்​துதல் ஆகியவை பிர​தான​மாக கையாளப்​பட்​டுள்​ளன.


இதுத​விர உடற்​கல்​வியை கட்​டாய​மாக்​கியதுடன், அனைத்து வகுப்​பு​களுக்கு பிரத்​யேக பாடத்​திட்​டம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. மாணவர்​கள் உடல்​நிலை, மனநிலையை சீராக வைத்து கொள்​வதற்​கான அம்​சங்​கள் இதில் கூறப்​பட்​டுள்​ளன. தொழில்​நுட்​பம் எந்​தளவுக்கு முன்​னேறி​னாலும் மொழியறிவு மிக​வும் அவசி​ய​மாகும்.


நமது இரு​மொழி கொள்​கை​யின்​படி தமிழ், ஆங்​கிலம் ஆகிய மொழிகளின் கற்​பித்​தல் முறை​களை மாற்​றங்​கள் செய்​துள்​ளோம். மேலும், மாணவர்​களின் படைப்​பாற்​றலை மேம்​படுத்​து​வதற்​காக கலைத் திறன்​களை பள்​ளி​களில் கொண்டு வந்​துள்​ளோம். மாணவர்​களுக்கு கல்​வியை மட்​டும் வழங்​காமல் வாழ்​வியல் திறன்​களை​யும் கற்​றுதர இருக்​கிறோம்.


நல்ல, தீய பழக்​கங்​கள், குட் டச், பேட் டச், வெற்​றி-தோல்​வியை சமமாக அணுகும் முறை, பிறருக்கு உதவுதல், இளம் பரு​வத்​தில் உடலில் ஏற்​படும் மாற்​றங்​கள், சிக்​கல்​களை கையாளும் விதம், இணைய பாது​காப்​பு என மாணவர்​களின் ஒவ்​வொரு காலக்கட்டத்​துக்கு பாது​காப்​பாக வாழ்​வதற்​கான திறன்​கள் பயிற்​று​விக்​கப்​படும். இந்த திட்​டத்​ததுக்​கான பாடத்​திட்​டம் தயாராகிவிட்டது. இந்த கல்​வி​யாண்​டிலேயே அமலுக்கு வரும். அதே​போல், மாணவர்​களை தொழில்​நுட்​பங்​களை கற்று தரு​வதற்​காக டிஎன் ஸ்பார்க் திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.


கல்விக் கொள்​கை​யில் கூறியபடி பாடத்​திட்​டம் எப்​போது மாற்​றப்​படும்? - தற்​போதைய பாடத்​திட்​டம் அமலுக்கு வந்து 9 ஆண்​டு​களாகி​விட்​டன. மாநில கல்விக் கொள்கை அடிப்​படை​யில் பாடத்​திட்​டம் மாற்​றப்​படும். அதற்​கான பிரத்​யேக குழுக்​கள் அமைக்​கப்​பட்டு விரை​வில் பணி​கள் தொடங்​கப்பட உள்​ளன.


10, 12-ம் வகுப்​பு​களை தவிர மற்ற வகுப்​பு​களுக்கு மதிப்​பீட்டு முறை​களில் எத்​தகைய சீர்த்​திருத்​தங்​களை எதிர்​பார்க்​கலாம்? - ஓராண்டு முழு​வதும் படிக்​கும் மாணவர்​களை ஆண்டு இறு​தித் தேர்​வின் அடிப்​படை​யில் மதிப்​பீடு செய்​வது முழு​மை​யாக இருக்காது. எனவே, ஒவ்​வொரு பரு​வத்​தி​லும் மாணவர்​கள் கற்​றல் நிலை, திட்​ட​மிட்ட கற்​றலை பெறா​விட்​டால் அதை எவ்​வாறு மேம்​படுத்​து​வது என்ற அடிப்​படை​யில் மதிப்​பீட்டு முறை​கள் மாற்றி அமைக்​கப்படும்.


தற்​போது 1 முதல் 8-ம் வகுப்​பு​களில் தொடர்ச்சி மற்​றும் முழு​மை​யான மதிப்​பீட்டு முறை (CCE) நடை​முறை​யில் உள்​ளது. 9, 11-ம் வகுப்​பு​களி​லும் தொடர்ச்​சி​யான மதிப்​பீட்டை கொண்டு வந்து தேர்வு முடிவு​கள் சார்ந்த மன அழுத்​தத்தை குறைத்து ஆழமான கற்​றல் ஊக்​குவிக்​கப்​படும்.


ஏஐ, ரோபோட்​டிக்ஸ் போன்ற 21-ம் நூற்​றாண்டு திறன்​கள் கிராமப்​புற, மலை​வாழ் பகுதி பள்​ளி​களுக்​கும் எப்​போது சென்று சேரும்? - டிஎன் ஸ்பார்க் திட்​டம் அதை சரிசெய்​யும். அதற்​கான பாடத்​திட்​டம் தயாரித்து பள்​ளிக்கு வழங்​கப்​பட்​டுள்​ளன. இதை வல்​லுநர்​களின் கருத்​துகளை பெற்று எஸ்​சிஇஆர்டி தயாரித்​துள்​ளது. நடமாடும் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள், கல்வி தொலைக்காட்​சி, மணற்​கேணி செயலி மற்​றும் டிஜிட்​டல் வகுப்​பறை​கள் மூலம் நகர்ப்​புற - கி​ராமப்​புற இடைவெளி குறைக்கப்படு​கிறது.


தமிழகத்​தில் 80 சதவீத அரசு பள்​ளி​கள் கிராமப்​புறத்​தில்​தான் உள்​ளன. எனவே அவர்​களுக்​கான தரமான கல்​வியை வழங்க நடவடிக்கை எடுத்​து​விட்​டோம். ஆசிரியர்​களுக்​கான பயிற்​சி, மாணவர் கற்​பித்​தல் முறை​யில்​தான் தற்​போது கவனம் செலுத்தி வரு​கிறோம்.


மாநிலக் கல்விக் கொள்​கை​யின் முன்​னேற்​றத்தை பொது​மக்​கள் எவ்​வாறு கண்​காணிக்க முடி​யும், அதற்​கான வெளிப்படை செயல்​முறை உள்​ள​தா? - கொள்கை என்​பது ஒரு வடிவ​மைப்​பு​தான். இதைச் செயல்​படுத்​து​வதற்​கான செயல்​திட்டத்தை உரு​வாக்​கு​கிறோம். எப்​போது திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும் என்​ப​தற்​கான பணி​களைத் தொடங்​கி​யுள்​ளோம்.


இவை எமிஸ், பள்ளி பார்வை ஆகிய செயலிகள் வழி​யாக தொடர்ந்து கண்​காணிக்​கப்​படும். ஆண்​டு​தோறும் பொது​மக்​களுக்கு கொள்கை நடை​முறைப்​படுத்​துதல் சார்ந்து அறிக்​கைகள் வெளி​யிடப்​படும். பள்ளி மேலாண்மை குழுக்​கள் நேரடி​யாக கொள்கை நடை​முறைப்​படுத்​துதலின் முன்​னேற்​றத்தை பள்​ளி​களில் கண்​காணிக்க முடி​யும்.


பள்ளி மாணவர்​களிடம் இடையே​யான சாதிய மோதல்​கள், போதைப் பழக்​கங்​களை தடுப்​ப​தற்​கான நடவடிக்​கைகள் என்ன? - கல்விக் கொள்​கை​யில் இதற்​கான தனி பிரிவு உரு​வாக்​கினோம். இதில் மாணவர்​களை எப்​படி ஒற்​றுமை​யாக இருக்​கச் செய்ய வேண்​டும் என்​பதை உறுதி செய்​திருக்​கிறோம்.


இதுத​விர மகிழ் முற்​றம், மனநல ஆலோ​சனை உதவி எண்​கள், வாழ்க்​கைத் திறன் கல்வி மூலம் சமூக ஒற்​றுமை மற்​றும் ஆரோக்​கிய​மான வாழ்க்கை முறை​கள் மேம்​படுத்​தப்​படு​கின்​றன. ஆசிரியர்​களுக்கு முரண்​பாடு​களை களைதல் மற்​றும் குழந்தை பாது​காப்பு ஆகிய​வற்​றில் பயிற்​சிகள் வழங்​கப்​பட்​டு, பாது​காப்​பான பள்ளி சூழல் உறுதி செய்​யப்​படு​கிறது


மாநிலக் கல்விக் கொள்​கையை செயல்​படுத்​து​வதற்கு தேவை​யான நிதி இருக்​கிற​தா? - பள்​ளிக்​கல்விக்கு நடப்​பாண்டு ரூ.46,767 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்ளது. தேவைப்​பட்​டால் கூடு​தல் தொகை​யை​யும் ஒதுக்க அரசு தயா​ராக இருக்​கிறது.


21-ம் நூற்​றாண்​டுக்கு மாணவர்​களை எவ்​வாறு தயார்​படுத்​து​வீர்​கள்? - 21-ம் நூற்​றாண்​டுக்கு மனப்​பாட கல்வி மட்​டும் உதவாது. கருப்​பொருள் அறிதல்​,சிக்​கல்​களை தீர்க்​கும் திறன், செயல்​முறை கல்​வி, குழு முயற்சி போன்ற திறன்​களை மாணவர்களிடம் வளர்த்​தால் மட்​டுமே வருங்​காலத்​தில் சாதனை​யாளர்​களாக அவர்​களை உரு​வாக்க முடி​யும்.

அந்​தவகை​யில் எதிர்​காலச் சவால்​களுக்கு மாணவர்​களை ஆயத்​தப்​படுத்​து​வதற்​கான வழி​காட்​டி​யாக இந்த கொள்கை விளங்கும்.


மாநிலக் கல்விக் கொள்கை தொடர்​பாக பொது​வெளி​யில் கருத்​துகள் கேட்​கப்​ப​டாதது ஏன்? - இந்த கொள்​கையை உரு​வாக்​கும் பணி​யில், ஆசிரியர்​கள், பெற்​றோர்​, சமூக நல அமைப்​பு​கள், உள்​ளாட்சி அமைப்​பு​கள் உள்​ளிட்ட 10,000-க்​கும் மேற்​பட்​டோரின் கருத்​துகள் பெறப்​பட்​டன. தனித்​தனி​யான பொதுகருத்​துக் கேட்​புக்​ கூட்​டம்​ நடத்​தப்​பட​வில்​லை. எனினும்​, இந்​த செயல்​முறை விரி​வான​தாக​வும்​ அனைத்​து தரப்​பினரும்​ பிர​தி​நி​தித்​து​வம்​ பெரும்​ வகை​யிலும்​ அமைந்​துள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி