தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு https://tnmedicalselection.net என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் கடந்த ஜூலை 30-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.
கடந்த 4-ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது கடந்த 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 16-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாணவருக்கு... இதற்கிடையே, அகில இந்திய முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. நீட் தேர்வில் 720-க்கு 665 மதிப்பெண்கள் பெற்று தமிழக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த திருநெல்வேலி மாணவர் எஸ்.சூர்ய நாராயணன், அகில இந்திய அளவில் 27-வது இடம் பெற்றிருந்தார். அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்ற அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி