ஐக்​கிய நாடு​களின் வளர்ச்சி திட்​டத்​தில் தமிழக பள்ளி மாணவர்​கள் 6 பேர் சர்​வ​தேச தூத​ராக தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2025

ஐக்​கிய நாடு​களின் வளர்ச்சி திட்​டத்​தில் தமிழக பள்ளி மாணவர்​கள் 6 பேர் சர்​வ​தேச தூத​ராக தேர்வு

 

ஐக்​கிய நாடு​கள் பொருளா​தார மற்​றும் சமூக கூட்​டமைப்​பால் அங்​கீகரிக்​கப்​பட்ட நிலை​யான வளர்ச்சி கவுன்​சில் சார்பில் 5-வது சர்​வ​தேச இளைஞர் மன்ற மாநாடு, தாய்​லாந்​தின் பாங்​காக் நகரில் ஆக. 21, 22-ம் தேதி​களில் நடை​பெற்​றது.


இதில் இந்​தி​யா உட்பட 62 நாடு​களி​லிருந்து பள்ளி மாணவர்​கள் பங்​கேற்​றனர். இந்த மாநாட்​டுக்கு தமிழகத்​திலிருந்து 8 முதல் பிளஸ்-1 வகுப்பு வரை பயிலும் 17 வயதுக்​குட்​பட்ட மாணவ, மாணவி​களில் நிலை​யான வளர்ச்​சிக்​கான இலக்​கு​கள் குறித்த அறி​வு, சிறந்த தகவல் தொடர்பு திறன் கொண்டவர்கள் பள்ளி சார்​பில் பரிந்​துரைக்​கப்​பட்​டிருந்​தனர்.


அவர்​கள் தமிழகத்​தின் சிறந்த செயல்​பாடு​களை ஒரு நிமிட வீடியோ​வாக​வும் சமர்ப்​பித்​தனர். இதில் பள்​ளிக்​கல்​வித் துறை​யால் தேர்வு செய்​யப்​பட்ட தலா 3 மாணவ, மாணவி​கள், ஒரு ஆசிரியர் அரசுப் பள்​ளி​கள் சார்​பில் பாங்​காக்​குக்கு அழைத்​துச் செல்லப்பட்டனர்.


அதன்​படி தேர்வு செய்​யப்​பட்ட வேலூர் அரசு பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளியைச் சேர்ந்த ச.நிஷாந்​தினி, தஞ்​சாவூர் அரசு மாதிரி மேல்​நிலைப் பள்ளி மாணவி மா.தரணிஸ்ரீ, நாமக்​கல் கீரம்​பூர் மாவட்ட மாதிரி மேல்​நிலைப் பள்ளி மாணவி யாழினி, சேலம் நகராட்சி ஆண்​கள் மேல்​நிலைப் பள்ளி மாணவர் அஷ்​வாக், நாமக்​கல் குமாரப்​பாளை​யம் அரசு ஆண்​கள் மேல்​நிலைப் பள்ளி மாணவர் கமலேஷ், செங்​கல்​பட்டு கண்​டிகை அரசு மேல்​நிலைப் பள்ளி மாணவர் ராகுல் ஆகியோர் ஐக்​கிய நாடு​களின் வளர்ச்​சித் திட்​டத்​தின் மூலம் சர்​வ​தேச அளவில் பிராண்டு தூத​ராக​வும் அங்​கீகரிக்​கப்​பட்​டுள்​ளனர். இது தமிழக அரசுப் பள்​ளி​களின் செயல்​பாடு​களுக்கு கிடைத்த மிகச்​சிறந்த வெற்​றி​யாகக் கருதப்​படு​கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி