தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்: கல்லூரிகளில் போட்டிகளை நடத்த யுஜிசி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2025

தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்: கல்லூரிகளில் போட்டிகளை நடத்த யுஜிசி உத்தரவு

 

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: புகழ் பெற்ற ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பிறந்த நாளான ஆக.29-ம் தேதி ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.


இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வரும் 29 முதல் 31-ம் தேதி வரை தடகளம் மற்றும் உள்ளரங்கம் சார்ந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், அந்த அமைச்சகம் வழங்கியுள்ளது.


அதை பின்பற்றி, விளையாட்டுப் போட்டிகளை சிறந்த முறையில் உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தி முடிக்க வேண்டும். கைப்பந்து, டென்னிஸ் பந்து கிரிக்கெட், பூப்பந்து, சதுரங்கம், கூடைப் பந்து,மேசைப் பந்து, கயிறு தாண்டுதல், கோ-கோ போன்ற போட்டிகளை நடத்தலாம்.மேலும், இதுசார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து யுஜிசி வலை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி