திருக்குறள்
குறள் 342:
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.
விளக்க உரை:
ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.
பழமொழி :
Time is your greatest asset.
நேரமே உன்னுடைய மிகப்பெரிய சொத்து.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நல்ல புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.
2. எனவே நல்ல புத்தகங்களை தேடிப் படிப்பேன்.
பொன்மொழி :
எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே; யாரையும் ஒதுக்காதே ; உன் பணியை ஊக்கத்துடன் செய்! - அரவிந்தர்
பொது அறிவு :
01.தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படும் நகரம் எது?
மதுரை(Madurai)
02. இந்திய தொல்லியல் துறை எந்த நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது?
அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
Alexander Cunningham
English words :
spotlight – a single ray of bright light onto a small area; the centre of public attention or interest.வட்டொளி தெறிவிளக்கு; மக்கள் கவன அல்லது ஆர்வ மையம்.
Grammar Tips:
When a one-syllable word ends with S, L, F, Z, double the last letter
Ex: CliFF, beLL, graSS, buZZ
Don't forget it should be a single syllable
More Examples
sniFF, oFF,
spiLL, duLL
dreSS, boSS
fuZZ, friZZ
அறிவியல் களஞ்சியம் :
ஒரு மனிதனின் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குறுத்தெலும் புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள்.
ஆகஸ்ட் 18
நேதாஜி அவர்களின் நினைவுநாள்
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ்.
விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
நீதிக்கதை
சிட்டுக்குருவியின் ஆசை
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி.
தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.
நீதி :
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.
இன்றைய செய்திகள் - 18.08.2025
⭐தமிழகத்தில் நாளை முதல் 38 ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்லும்- மத்திய மந்திரி எல்.முருகன் தகவல்
⭐கார், பைக்குகள் மீதான GST வரியை குறைக்க மத்திய அரசு முடிவு விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு
⭐தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்
⭐ஆபரேஷன் சிந்தூரில் 13 ராணுவ வீரர்கள் பலி.. 3 மாதங்களுக்கு பிறகு ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது.
🏀பாலியல் குற்றச்சாட்டு: கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளுக்கு தடை உ.பி. லீக் போட்டியில் ஆட முடியாது.
Today's Headlines
⭐Union Minister L. Murugan has informed that the southern trains will stop at 38 railway stations in Tamil Nadu from tomorrow onwards.
⭐ The central government decided to reduce GST on cars and bikes, so prices are likely to come down significantly.
⭐M.K.Stalin has announced various new projects for the Dharmapuri district
⭐13 soldiers killed in Operation Sindoor.. Pakistan openly admits after 3 months.
SPORTS NEWS
🏀 Pakistan's squad for the Asia Cup T20 series has been announced. In Group A, India will face Pakistan in Dubai on the 14th.
🏀Sexual allegation: Cricketer Yash Dayal banned from playing in the UP league.
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி