School Morning Prayer Activities - 08.08.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2025

School Morning Prayer Activities - 08.08.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2025

திருக்குறள் 

குறள் 166: 


கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 

உண்பதூஉ மின்றிக் கெடும்.


விளக்க உரை: பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.


பழமொழி :

Every mistake is a hidden lesson. 


ஒவ்வொரு தவறும் ஒரு மறைந்த பாடமே.


இரண்டொழுக்க பண்புகள் :


1.எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை.


2.எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :


பொறுமையே ஆற்றல்; பொறுமையும் காலமும் முசுக்கொட்டை இலையைக் கூட பட்டாக மாற்றிவிடும் - சீனப் பொன்மொழி


பொது அறிவு : 


01.இந்தியாவின் முதல் நிலக்கரி காட்சியகம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?


தேசிய அறிவியல் மையம்

புதுடெல்லி

National science centre, New Delhi


02. உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?


நெதர்லாந்து(Netherland)


English words :


elusive - not easy to catch or find.நழுவிச் செல்லும் தன்மையுடைய.


Grammar Tips: 


 When to use some and any

"Some" is used in affirmative (positive) sentences

Ex: "I have some cookies."


while "any" is used in negative sentences and questions.

Ex: "I don't have any money."


அறிவியல் களஞ்சியம் :


 லூயிஸ் பாஸ்டர், (Louis Pasteur) (1822-95) என்ற பெரிய பிரெஞ்சு வேதியியலாரை அவர் பின்பற்றி ஆய்வு செய்தவர். பாஸ்டர் மக்களின் நோய்களுக்கான எதிர்ப்புக்கான தடைக்காப்பை, நோய்த் தடுப்புச் சத்து நீர்களை (Vaccines) ஊசி மூலம் குருதியில் உட்செலுத்தியோ அல்லது திறன் குறைந்த நுண்ணுயிர்களின் சேகரிப்புத் தொகுதியை உட்செலுத்தியோ இயற்கையான பகைவர்களை உள்ளேயே உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தி வளர்த்தார்.


ஆகஸ்ட் 08


ரோஜர் ஃபெடரர் அவர்களின் பிறந்தநாள்


ரோஜர் ஃபெடரர் (பிறப்பு - ஆகத்து 8, 1981) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டென்னிசு வீரர். 20 கிராண்ட் சிலாம் எனப்படும் பெருவெற்றித் தொடர்களை வென்றுள்ளார். மேலும், மொத்தம் 302 வாரங்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்தவராகவும், தொடர்ச்சியாக 237 வாரங்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்தமையும் இவரது முக்கிய சாதனைகளுள் ஒன்றாகும்.


இவர் இதுவரை ஒற்றையர் ஆண்கள் பிரிவில் 20 கிராண்ட் சிலாம் (6 ஆத்திரேலிய ஓப்பன், ஒரு பிரெஞ்சு ஓப்பன், 5 அமெரிக்க ஓப்பன், 8 விம்பிள்டன்) பட்டங்களை வென்றுள்ளார். தவிர நான்கு (ஆத்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா) இடங்களிலும் கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற எட்டு ஆண் வீரர்களுள் ஒருவராவார். 29 முறை கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிகளில் ரோசர் பெடரர் விளையாடியுள்ளது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையாகும். மேலும் தொடர்ச்சியாக 23 முறை கிராண்ட்சிலாம் போட்டிகளின் அரையிறுதியில் விளையாடியதும் இவரது முக்கியச் சாதனைகளுள் ஒன்றாகும்.


நீதிக்கதை


 பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.


       இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: “போதும்! நான் பால் குடிக்க வேண்டும்…”


     கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.இதைக் கண்ட கீழே இருந்த எலி, “நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்” என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.


நீதி : துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.


இன்றைய செய்திகள் - 08.08.2025


⭐சுதந்திர தின விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு


⭐அமலாக்கத்துறை விசாரணை இன்றி பலரை ஆண்டுக்கணக்கில் சிறையில் வைத்துள்ளது. இவ்வாறு நேர்மையின்றி செயல்படக்கூடாது என சுப்ரீம் கோர்ட் அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது


⭐14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கம் பெற்று  சாதனை; தமிழக பொருளாதார வளர்ச்சி 11.9 சதவீதமாக அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


⭐இந்தியாவுக்கு 50% வரி: டிரம்ப் மீண்டும் அதிரடி


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀இந்தியாவில் நடைபெறும் ஆசிய கோப்பை ஹாக்கி- பாகிஸ்தான் அணி விலகல்


🏀அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.43 கோடி பரிசு தொகை அளிக்கப்படும்.


Today's Headlines


⭐Indian Railways has announced special trains for the southern districts 

regards for the upcoming Independence Day holidays:  


⭐ Supreme Court says the Enforcement department should not act dishonestly for years of imprisonment without trial.. 


⭐Chief Minister M.K. Stalin proudly announced a double-digit record in Tamil Nadu's economic growth, which increased to 11.9 percent after 14 years.


⭐US President Trump has taken action on a 50% tax on India: 


 SPORTS NEWS 


🏀 Pakistan pulls out of the Asia Cup Hockey in India.


🏀US Open tennis champions to receive Rs 43 crore prize money each.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி