TNPSC தேர்வு 43,882 பேர் 'ஆப்சென்ட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2025

TNPSC தேர்வு 43,882 பேர் 'ஆப்சென்ட்'

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 1,033 பணியிடங்களுக்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு அறிவிப்பு, மே 21ல் வெளியிடப்பட்டது. மொத்தம், 92,509 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். அவர்களுக்கு பாடவாரியான போட்டி தேர்வு, கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது.


தமிழ் மொழி தகுதி தேர்வு, பொது அறிவு, திறன் அறிவு தேர்வு, மொழிபெயர்ப்பு தேர்வு நேற்று காலை மற்றும் மாலையில் நடந்தது. தமிழகம் முழுதும் 92,509 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்த நிலையில், 48,627 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.


மொத்தம், 43,882 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. விண்ணப்பித்தவர்களில் 47.44 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்காதது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து, தமிழ்நாடு அனைத்து நிலைப்போட்டி தேர்வர்கள் சங்க தலைவர் கலீல் பாஷா கூறுகையில், “ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் தமிழ் மொழி தகுதி தேர்வை, 47 சதவீதம் பேர் எழுதாதது, டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகத்தின் மீது போட்டி தேர்வர்களுக்கு நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது,” என்றார்.

1 comment:

  1. அவர்கள் வராத காரணம் என்னானா tnpsc யின் மீது நம்பிக்கை இல்லை என்பதே.
    நடந்த gr4 லே நிறைய பேர் நம்பிக்கை இழந்து விட்டனர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி