தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2025

தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் அறிவிப்பு

 

நாடு முழு​வதும் 10, 12-ம் வகுப்​பு​களுக்​கான பொதுத் தேர்​வு​கள் அக்​டோபர் 14 முதல் நவம்​பர் 18-ம் தேதி வரை நடை​பெறும் என்று தேசிய திறந்​தநிலை பள்ளி நிறு​வனம் தகவல் தெரி​வித்​துள்​ளது.


மத்​திய கல்வி அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் தேசிய திறந்​தநிலை பள்ளி நிறு​வனம், பள்​ளிக் கல்​வியை தொலைநிலை வழி​யில் பயிற்​று​வித்து வரு​கிறது. அதனுடன், திறன் மேம்​பாட்​டுக்​கான தொழிற் படிப்​பு​களை​யும் வழங்​கு​கிறது. அந்த வகை​யில், நாடு முழு​வதும் சுமார் 24 லட்​சம் மாணவர்​கள் இதன் வாயி​லாக பலன்​பெற்று வரு​கின்​றனர்.


இந்​நிலை​யில், 10, 12-ம் வகுப்​பு​களுக்​கான பொதுத் தேர்​வுக்​கால அட்​ட​வணையை தேசிய திறந்​தநிலை பள்ளி நிறு​வனம் தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, பொதுத் தேர்​வு​கள் வரும் அக். 14-ல் தொடங்கி நவ. 18-ம் தேதி வரை நடை​பெறும். இந்த தேதி​களில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​ப​டாது. விரி​வான தேர்​வுக்​கால அட்​ட​வணையை மாணவர்​கள் nios.ac.in எனும் வலை​தளத்​தில் அறிந்து கெள்​ளலாம்.


மேலும், ஹால்​டிக்​கெட்​கள் தேர்​வு​களுக்கு சில நாட்​களுக்கு முன்பு வெளி​யிடப்​படும். பொதுத் தேர்​வு​களின் முடிவு​கள் தேர்வு முடிந்த 7 வாரங்​களுக்​குள் அறிவிக்​கப்​படும் என்​று, தேசிய திறந்​தநிலை பள்ளி நிறு​வனம் சார்​பில் வெளி​யான அறி​விப்​பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி