கணினி சான்றிதழ் தேர்வு: தேர்ச்சி சான்றிதழை செப்​.26 வரை பெறலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2025

கணினி சான்றிதழ் தேர்வு: தேர்ச்சி சான்றிதழை செப்​.26 வரை பெறலாம்

 

அரசு கணினி சான்​றிதழ் தேர்​வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்​வர்​கள், மண்டல விநி​யோக மையங்​களில் செப்​.26-ம் தேதி வரை தேர்ச்சி சான்​றிதழை நேரில் பெற்​றுக் கொள்​ளலாம்.


‘கோ​வா’ எனப்​படும் அரசு கணினி சான்​றிதழ் தேர்​வு, தொழில்​நுட்​பக் கல்வி இயக்​கத்​தால் ஆண்​டுக்கு 2 தடவை நடத்​தப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், 2024 ஆகஸ்ட் பருவ கணினி சான்​றிதழ் தேர்வு ஜூன் மாதம் நடத்​தப்​பட்டு தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டன.


இத்​தேர்​வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்​வர்​கள் சம்​பந்​தப்​பட்ட மாவட்ட மண்டல விநி​யோக மையங்​களில் உரிய ஆதா​ரங்​களை (அடை​யாள சான்​று, ஹால்​டிக்​கெட், ஆதார் அட்​டை) காண்​பித்து செப்​.26-ம் தேதி வரை நேரடி​யாக பெற்​றுக் கொள்​ளலாம் என்றுதொழில்​நுட்​பக் கல்வி இயக்கக உதவி இயக்​குநர் (தேர்​வு​கள்) கே.பிர​பாகரன் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி