முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் த.அமிர்தகுமார் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது: அக்.1-ம் தேதி ஆயுத பூஜை, 2-ம் தேதி விஜயதசமி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை புதன், வியாழக்கிழமைகளில் வருகிறது. தொடர்ந்து அக்.3-ம் தேதி வேலை நாளாக உள்ளது. இதைத் தொடர்ந்து அக்.4,5-ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை நாட்களாகும். எனவே, அக்.3-ம் தேதி ஒரு நாள்மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால், 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.
அதன்மூலம், தசரா பண்டிகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சொந்த ஊரில் கொண்டாடி விட்டு திங்கள்கிழமை பணிக்கு வருவார்கள். எனவே, அக்.3-ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கோருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி