காலாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2025

காலாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

 

காலாண்டு விடு​முறை​யில் தனி​யார் பள்​ளி​கள் சிறப்பு வகுப்​பு​கள் நடத்​தக் கூடாது என்று பள்​ளிக்​கல்​வித் துறை அறிவுறுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் அரசு, அரசு உதவி மற்​றும் தனி​யார் பள்​ளி​களில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு ஆண்​டு​தோறும் செப்​டம்​பர் மாதம் காலாண்​டுத் தேர்வு நடத்​தப்​படும்.


அந்​தவகை​யில் நடப்பு கல்​வி​யாண்​டில் காலாண்​டுத் தேர்​வு​கள் கடந்த 10-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் முடிவடைந்​தன. இதையடுத்து மாணவர்​களுக்கு காலாண்டு விடு​முறை இன்று (செப்​.27) முதல் அக்​டோபர் 5-ம் தேதி வரை விடப்​பட்​டுள்​ளது. இந்த விடு​முறை முடிந்து பள்​ளி​கள் மீண்​டும் அக்​.6-ம் தேதி திறக்​கப்பட இருக்​கின்​றன.


இந்​நிலை​யில் காலாண்டு விடுப்​பில் தனி​யார் பள்​ளி​கள் சிறப்பு வகுப்​பு​கள் நடத்​தக் கூடாது என்று பள்​ளிக்​கல்​வித்துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது. உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​படி, விடு​முறை நாட்​களில் சிறப்பு வகுப்​பு​கள் நடத்​தப்​ப​டா​மல் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.


அவற்றை மீறும் பள்​ளி​கள் மீது துறைரீ​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும் என மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது. எனினும், சென்னை உட்பட சில மாவட்​டங்​களில் தனி​யார் பள்​ளி​கள் சிறப்பு வகுப்​பு​களுக்​கான கால அட்​ட​வணையை வெளி​யிட்​டுள்​ள​தாக​வும் தகவல்​கள்​ வெளி​யாகி யுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி