திருக்குறள்
குறள் 466:
செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
விளக்க உரை:
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.
பழமொழி :
Good habits formed in youth make all difference.
இளமையில் உருவாகும் நல்ல பழக்கங்கள் வாழ்நாளையே மாற்றுகின்றன.
இரண்டொழுக்க பண்புகள் :
1.அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்லாது நாம் ஆழ்ந்து சிந்திக்கவும் தூண்டுவது.]
2. எனவே தேவையில்லாத பேச்சைக் குறைத்து அமைதி காக்க முயல்வேன்.
பொன்மொழி :
செல் நோண்டும் பல மணியில் சில நிமிடம் ஒதுக்கி ,மண் நோண்டி மரம் நடுவோம் - நடிகர் விவேக்
பொது அறிவு :
01.உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்
Sir Jagadish Chandra Bose
02.மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடம் எது?
நீலகிரி -The Nilgris
English words :
take after– resemble , முன்னோரை போல ஒத்து இருத்தல்
Grammar Tips:
When and where to use "to and too"
To is used to show direction, place and purpose
Ex–she gave the book to me
I am going to school
After 'to' only present tense will come
Too means also or more than enough
Ex–I want to play too
The bag is too heavy
அறிவியல் களஞ்சியம் :
மனிதர்களின் மேல் தோல் கீழ் மல்பீஜியன் அடுக்குகள் (Malphigian Layers) உள்ளன. இவ்வடுக்குகளில் நிறமித் துணுக்குகள் (Pigment Granules) காணப்படுகின்றன. இவை மனிதனின் தோலின் நிறத்தை நிர்ணயிக்கின்றன. இந்நிறமித் துணுக்குகளில் உள்ள இரசாயனப் பொருள்களின் தன்மை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைவதால், நிறமும் வெவ்வேறு விதத்தில் அமைகிறது.
செப்டம்பர் 19
சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் பிறந்தநாள்
சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 19, 1965) ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்.
நீதிக்கதை
அம்மா சொல் கேள்!
ஒரு நாள் பொழுது விடிந்ததும், ஒருவன் தனது ஆடுகளை செழிப்பான ஒரு புல்வெளியில் மேய்த்துகொண்டிருந்தான். ஆடுகளை மேய்த்தவன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான்.
புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. வேலியோரம் ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்ததை பார்த்த ஒரு ஓநாய் ஆட்டுக்குட்டியைத் தின்னும் ஆசையில் பார்த்தது.
வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டது.
ஓநாய் நண்பா!, இங்கே இளசாண புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாப்பிட தோன்றுகிறது என்று வருத்தத்துடன் கூறியது. அப்படியா! நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே? என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக்குட்டி.
சேச்சே... அதெலாம் சுத்தப் பொய்! என்றது ஓநாய். அப்படியென்றால் இரு. நான் வெளியே வருகிறேன். நாம் இரண்டு பேரும் சேர்ந்து மலையின் அந்தப் பக்கம் இருக்கும் இளம்புலை சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்தது.
உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக்கொன்று தின்றது. அந்த ஆட்டுக்குட்டி ஓநாய்க்கு உதவி செய்ய போய் தனது உயிரை இழந்துவிட்டது.
நீதி :
அனுபவம் நிறைந்தவரின் ஆலோசனை மிகவும் முக்கியம்.
இன்றைய செய்திகள் - 19.09.2025
⭐TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.
வருகிற 28ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வுகள்
www.tnpsc.gov.in, www.tnpscexam.in இணைய தளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.
⭐சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
⭐அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு பரஸ்பர வரியாக 25 சதவீதம் அமல்படுத்தியுள்ளது.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀சர்வதேச கிரிக்கெட் -
அதிக சதங்கள் விளாசிய வீராங்கனைகள் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 2வது இடத்திற்கு முன்னேற்றம்
🏀இந்தியா சார்பில் நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் நீரஜ் சோப்ரா 84.03 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பெற்றனர்.
Today's Headlines
⭐TNPSC Announced Group 2, 2A exams will be held on the 28th ,through www.tnpsc.gov.in, and hall ticket can be downloaded from the website www.tnpscexam.in ,
⭐In a statement issued by the Chennai Meteorological Department, A low-level circulation is prevailing over the South Indian regions. Due to this, light to moderate rains are likely to occur in the areas of Tamil Nadu, Puducherry and Karaikal.
⭐The US has imposed a 25 percent reciprocal tariff on Indian goods.
*SPORTS NEWS*
🏀International Cricket - Indian player Smriti Mandhana moves up to 2nd place in the list of players with most centuries.
🏀Reigning champion Neeraj Chopra and Sachin Yadav will be participating from India. India's Sachin Yadav finished 4th with 86.27 points and Neeraj Chopra finished 8th with 84.03 points.
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி