School Morning Prayer Activities - 25.09.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2025

School Morning Prayer Activities - 25.09.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.09.2025

திருக்குறள் 

குறள் 515: 


அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் 

சிறந்தானென் றேவற்பாற் றன்று. 


விளக்க உரை: 


(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.


பழமொழி :

A single kind word can change someone's entire day. 


ஒரு இனிய சொல் ஒருவரின் முழு நாளையே மாற்றிவிடும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.


2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.


பொன்மொழி :


சிறந்த எண்ணம் கீழான எண்ணத்தை அடக்கும்போது ஒரு மனிதன் தனக்குத்தானே தலைவனாகிறான் - சாக்ரடீஸ்


பொது அறிவு : 


01.தமிழகத்தின் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?



போடிநாயக்கனூர்- தேனி மாவட்டம்

Bodinayakanur -Theni District


02.FIDE உலக சதுரங்கப் போட்டி 2025 எந்த நாட்டில் நடைபெற உள்ளது?


கோவா- இந்தியா

Goa- India


English words :


Take on –accept a task. ஒரு பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல்


Grammar Tips: 


 "Into" vs "in to"

“Into” is a preposition that means "to the inside" of something.

As per rules prepositions describe the relationship between a noun or pronoun and another word.

Ex: We walk into a restaurant 


We use “in to” when either the word “in” or the word “to” is part of a verbal phrase.

Ex: “Let's check in to the hotel before we go out.”

“Jessie stopped in to pick up lunch.”


அறிவியல் களஞ்சியம் :


 கடலுக்கு அடியில் தனிமங்கள்


மெக்சிகோவின் மேற்கு -- அமெரிக்காவின் ஹவாய் இடையே உள்ள கடல் பகுதியில் 13,123 அடி ஆழத்தில் நிக்கல், மாங்கனீசு, காப்பர், ஜிங்க், கோபால்ட் உள்ளிட்ட தனிமங்கள் உள்ளன. இவை 'பாலிமெட்டாலிக் நுாடுல்ஸ்' என அழைக்கப்படும் பாறைகளில் கலந்துள்ளன என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதே போல சூரிய ஒளி இல்லாத 13 ஆயிரம் - 19 ஆயிரம் அடி ஆழ பகுதிகளில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய, இந்த தனிமங்களின் மூலக்கூறுகள் உதவுகின்றன. இப்பகுதி 45 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது என தெரிவித்துள்ளனர்.


செப்டம்பர் 25


சதீஷ் தவான் அவர்களின் பிறந்த நாள்


சதீஷ் தவான் (பஞ்சாபி: ਸਤੀਸ਼ ਧਵਨ, இந்தி: सतीश धवन) (25 செப்டம்பர் 1920–3 சனவரி 2002) ஓர் இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார். சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். 1972-இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.


நீதிக்கதை


 ஓர் ஆண் மான் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது அதற்கு தாகம் ஏற்பட்டது. தண்ணீரை தேடி ஒரு குளத்தின் அருகே வந்தது. தாகம் தண்ணிரை வயிறு முட்ட நீரை பருகியது.


அப்போது தன்னுடைய உருவத்தை தண்ணீரில் கண்டது. தலைக்கு மேல் கிளைகள் போல் விரிந்து இருந்த தன் கொம்புகளின் பிம்பத்தை நீரில் பார்த்தது. ‘அவை எவ்வளவு அழகாக இருக்கின்றன! உலகிலேயே மிக அழகான மிருகமாக நான் இருப்பதற்கு இந்த கொம்புகளே காரணம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.


சொல்லியவாறு கீழே குனிந்த மான் ஒல்லியான தன்னுடைய கால்களை பார்த்தது; மிகவும் ஏமாற்றமடைந்தது. ‘இல்லை, இந்த கால்கள் என்னை அழகில்லாதவனாக்குகின்றன. உலகிலேயே அழகான மிருகமாக நான் இருக்க முடியாது,’ என்று சொல்லி வருந்தியது.


மரங்களுக்குப் பின்னால் நின்றவாறு பசியோடு இருந்த புலி ஒன்று சத்தம் இல்லாமல் மானை பார்த்துக் கொண்டிருந்தது. மானை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து வந்தது. உயரமாக வளர்ந்திருந்த புற்கள் சரசரத்தன. தன் எண்ணங்களில் மூழ்கியிருந்த மான் புலி நெருங்குவதை கவனிக்கவில்லை. 


புலி, மானை பிடிக்க பாய்ந்தது. திடுக்கிட்ட மான் மிக வேகமாக ஓட துவங்கியது. புலியிடமிருந்து தப்பித்து நான்கு கால் பாய்ச்சலில் அதிவேகமாக ஓடியது. புலி மிகவும் பின்னால் துரத்திக் கொண்டு வந்தது.


இனிமேல் துரத்தினாலும் மானை பிடிக்க முடியாது என்று புலி முடிவு செய்த நேரத்தில் மானின் கொம்புகள் ஒரு மரக்கிளையில் சிக்கிக்கொண்டன. மரக்கிளையில் இருந்து விடுபட மான் மிகவும் முயற்சி செய்தது. ஆனால், மானால் கொம்புகளை விடுவிக்க முடியவில்லை.


“என் கால்கள் அழகாக இல்லை என்று நான் அவமானமடைந்தேன். நான் தப்பித்துக் கொள்ள அவை தான் எனக்கு உதவி புரிந்தன. என் கொம்புகளை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். ஆனால், என்னுடைய இறப்புக்கு அவையே காரணமாக உள்ளன” என்று மான் வருத்தத்துடன் தனக்குள் சொல்லிக் கொண்டது.


இதற்குள் மானை நெருங்கிய புலி அதன் மீது பாய்ந்து, அதை கொன்று தின்றது.


நீதி: ஆபத்துக்கு உதவாத அழகை விட நம்மை காக்கும் நமது உறுப்புகள், நல்ல நண்பர்கள் நமக்கு தேவை.


இன்றைய செய்திகள் - 25.09.2025


⭐தமிழகத்தில் ₹.1,500 கோடியில்,133 புதிய துணை மின்நிலையங்கள் & ஏற்கெனவே உள்ள துணை மின்நிலையங்களில், 52 பவர் டிரான்ஸ் ஃபார்மர்களைப் பொருத்த தமிழக மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.


⭐நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 20 பெட்டிகளுடன்   இயக்கம்: 1,440 பேர் பயணிக்கலாம்.


⭐தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀ஐசிசி தரவரிசையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவின் உச்சத்தை தொட்ட அபிஷேக் சர்மா..!


Today's Headlines


⭐The Tamil Nadu Electricity Board is planning to install 133 new substations & 52 power transformers in existing substations at a cost of ₹1,500 crore in Tamil Nadu.


⭐ Nellai - Chennai Vande Bharat train to operate with 20 coaches: 1,440 passengers can travel. 


⭐ Meteorological Centre has announced  heavy rain likely in Tamil Nadu till 30th  September


 SPORTS NEWS 


🏀Cricket - Abhishek Sharma surpasses Virat Kohli,  Suryakumar Yadav in ICC rankings.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி