தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடவும்: மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2025

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடவும்: மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

தீபாவளி பண்​டிகை வரும் 20-ம் தேதி கொண்​டாடப்பட உள்​ளது. இந்த நாளில் பள்ளி மாணவர்​கள் பாது​காப்​பாக தீபாவளி பண்​டிகையை கொண்​டாடு​வது குறித்​து, பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் ஆண்​டு​தோறும் அறி​வுரை வழங்​கப்​பட்டு வருகிறது. அதன்​படி, நடப்​பாண்​டும் மாணவர்​கள் விபத்​தில்லா தீபாவளி பண்​டிகையை மகிழ்ச்​சி​யுடன் கொண்​டாடும் வகை​யில், பல்​வேறு அறி​வுரைகளை பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன் வழங்​கி​யுள்​ளார்.


அதன் விவரம் வரு​மாறு: தீபாவளி பண்​டிகை நாளில் மக்​கள் கவனக் குறை​வாக பட்​டாசு வெடிப்​ப​தால் தீ விபத்து ஏற்​படலாம். இது தவிர, உயிர்​சேதம், பொருள் சேதங்​கள் ஏற்பட வாய்ப்​புள்​ளது. மேலும், குழந்​தைகளுக்கு தீக்​கா​யங்​களும், சில நேரங்​களில் பார்வை இழப்​பும் ஏற்​படக் கூடும். இத்​தகைய நிகழ்​வு​களை தவிர்ப்​பதும், தடுப்​பதும் நமது கடமை​யாகும். எனவே, பள்ளி மாணவர்​களுக்கு தீபாவளி பண்​டிகையை பாது​காப்​பாக கொண்​டாட விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்பட வேண்​டும்.


அதன்​படி, பட்​டாசுகளை கொளுத்​தும் போது தளர்​வான ஆடைகள், எளி​தில் பற்​றக்​கூடிய ஆடைகளை அணி​யக் கூடாது. பட்​டாசு வெடிக்​கும் போது அருகே ஒரு வாளி தண்​ணீர் வைத்​துக் கொள்ள வேண்​டும். கையில் வைத்து பட்​டாசுகளை வெடிக்​கக் கூடாது. அதே​போல், கூட்​ட​மான இடங்​கள், தெருக்​கள், சாலைகளில் வெடிக்க வேண்​டாம். பெற்​றோர் முன்பு பிள்​ளை​கள் பட்​டாசுகளை வெடிக்க வேண்​டும்.


விலங்​கு​களை துன்​புறுத்​தும் வகை​யில் பட்​டாசுகளை வெடிக்​கக் கூடாது. வெடிக்​காத பட்​டாசுகளை பரிசோ​திப்​பதை தவிர்க்க வேண்​டும். மேலும், இரவு 10 முதல் காலை 6 மணி வரை பட்​டாசுகளை வெடிக்​கக் கூடாது என்​பது உட்பட பல்​வேறு அறி​வுரைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த தகவல்​களை பள்ளி மாணவர்​களுக்கு தெரி​வித்து ஆசிரியர்​கள் தொடர் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி