Future ready அக்டோபர் வினாத்தாள்களை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்ய இன்றே கடைசி நாள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2025

Future ready அக்டோபர் வினாத்தாள்களை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்ய இன்றே கடைசி நாள்...

 

9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்சிந்தனை வினாக்களை எதிர்க்கொள்ளும் திறனை வளர்த்திட மாதாந்திர Future Read பயிற்சி அளிக்கப்படவுள்ளது . 

1 முதல் 5 ஆம் வகுப்புக்கான Future ready வினாத்தாள்களை ஆசிரியர்களை CMS வலைதளம் வழியாக அணுகலாம் . 6 முதல் 9 ஆம் வகுப்புக்கான Fature ready மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக  http://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும் வினாத்தாள்களை ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 இவ்வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள் , வினா அமைப்பு . தேர்வுகளில் இவ்வகை வினாவை எதிர்கொள்ளும் முறை குறித்து தாங்கள் கற்பிக்கும் பாடத்தினூடாக அனைத்து ஆசிரியர்களும் தங்கள் வகுப்புகளில் மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

 அனைத்து அரசு தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அக்டோபர் மாதத்திற்கான வினாத்தாளை 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி