பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்திட வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நவம்பர் முழுவதும் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் காணொலி வாயிலாக நடந்தது. இதில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகள், அரசு நிலைப்பாடு குறித்து விவாதித்தனர்.
பத்து அம்ச கோரிக்கைகளாக 1.4.2003 க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 23.8.2010க்கு முன்பு பணியேற்ற ஆசிரியர்களை 'டெட்' அச்சுறுத்தலில் இருந்து காக்க சீராய்வு மனு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு இணையான சம்பளத்தை மாநில அரசும் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும். கருணைப் பணிநியமனத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இவற்றை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை குறித்து ஆலோசனை நடந்தது.
அமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டத்தை நவ., 1 ல் திருச்சியில் நடத்த முடிவு செய்துள்ளனர். நவ.,10 முதல் 14 வரை பள்ளிகள், கல்லுாரிகள், அரசு அலுவலகங்களில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசின் தாமதம், அதற்காக போராட்டம் நடத்துவது, அதில் பங்கேற்பது குறித்து வாகன பிரசார இயக்கம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்.
நவ.,18 ல் அடையாள வேலை நிறுத்தம் செய்வது, இதில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பங்கெடுக்கச் செய்வது என்றும், அதன்பின்னும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு செல்வது என்றும் தெரிவித்துள்ளனர்.

சாகபோகையில் சங்கரா என்று சொல்வது போல் இந்த சங்க செயல்பாடு
ReplyDeleteஇந்திய திருநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் படிச்சிட்டு வேலையில்லா இருக்கிற இந்த சூழ்நிலையில ஆசிரியர் வேலையில இருக்கிற ரெகுலரா ஆசிரியர் வேலையில இருக்கிற பல்லாயிரம் அரசு ஆசிரியர்கள் இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கேட்பது அவர்களுடைய உரிமையா இருந்தாலும் அவர்கள் வாங்குகின்ற ஊதியம் அதிகமே ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட 40,000 50,000 அப்படின்ற மேனிக்கு சம்பளம் வாங்குறாங்க இதை வச்சுக்கிட்டு அவங்கள வாழ்க்கை நடத்த முடியாதா என்ன ஆசிரியர் பணியில் என்னத்த இவங்க வெட்டி மறைக்கிறாங்க இவங்க அரசு அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கு எல்லா சலுகைகளும் அரசாங்கம் கொடுக்குது இந்த லட்சணத்துல ஊதியம் வேற ஊதிய உயர்வு வேற ஏத்தி கேட்கிறது பென்ஷன் வேற பென்ஷன் வேற கேட்கிறது கொடுக்கிற சம்பளமே அதிகமான சம்பளம்
ReplyDeleteஉங்களுக்கு தகுதி இருந்தா நீங்கள் ஆசிரியராக வந்திருக்கலாமே
Deleteதொடக்க பள்ளி ஆசிரியர்கள பணியில் சேரும்போது மிக குறைந்த சம்பளம் மட்டுமே அது உஙக்ளுக்கு தெரியுமா? தெரியதா? பத்து ஆண்டு கடந்த பின்னர் தான் நீங்கள் சொல்வது போல 40000 to 50000. இந்த சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்த முடியாத என்று கேள்வி கேட்கும் நீங்கள்? ஏன் சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பளம் 1 lakhs above monthly அதை பற்றி கேள்வி கேட்பீங்களா? ஆசிரியர் பணி சாதாரமான விஷயம் அல்ல. சிறு குழந்தைகள் சமாளிப்பது மற்றும் கல்வி போதிப்பது சவாலான பணி. மேலும் இந்த காலத்தில் வாடகை 8000 .குறைந்து வீடு இல்லை. ஆகவே சொந்த வீடு கட்டுவதற்கு ஆசிரியர் முயற்சி செய்கிறார்கள். அது தவறா? தமிழக அரசு குறைந்த வட்டியில் வீடு கட்ட கடன் தருவார்களா? இடம் வாங்கவே ஒரு சென்ட் காட்டுப்பகுதியில் கூட 3 laksh to 4 lakhs . minumum 3.5 cent muist. so 15 lakhs for இடம் வாங்கவே . மேலும் வீடு கட்ட 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை ஆகும். மொத்தமாக 35 lakhs முதல் 40 lakhs வரை ஆகும் . இதற்கு வங்கிகளில் கடன் வாங்க வேண்டும். வட்டி மட்டும் வாங்கிய கடனை விட கூடுதலாக 15 laksh to 20 lakhs paid பண்ணனும் . ஆசிரியர் பணி மிக குறைந்த சம்பளம் மட்டுமே 75000 to 1 lakhs .அந்த நேரத்தில் பிள்ளைகளின் உயர் கல்வி படிப்பு அல்லது திருமண செலவு அல்லது தனது மருத்துவ செலவினங்களில் பணம் செலவு ஆகி விடும் . புரிந்து கொள்ளுங்கள்
Deleteதாராளமாக நீங்களும் படித்து பட்டம் பெற்று போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்று அரசு பணி பெற வாழ்த்துக்கள்👍...
ReplyDeleteஆடத்தெரியாதவனுக்கு தெரு கோணல் என்று சொன்னானாம்.அப்படி இருக்குடா உங்கத.....
ReplyDeleteஅனைத்து ஆசிரியர்களும்
ReplyDeleteமாதாந்திர சந்தா செலுத்தாதீர்கள்.
ஜாக்டோ ஜியோ அமைப்பு DMKக்கு சாதகமாகா செயல்படுகீரது.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் undefined மிக குறைந்த சம்பளத்தில் பணியாற்று வருகின்றனர். சம வேளைக்கு சம ஊதியம் வழங்க வேண்டியது அரசின் தலையை கடமைகளாகும்
ReplyDelete