டிட்டோஜேக் & பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சந்திப்பு ( 30.01.2026 ) விவர அறிக்கை : - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2026

டிட்டோஜேக் & பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சந்திப்பு ( 30.01.2026 ) விவர அறிக்கை :

 

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் சார்பில் அவசர அழைப்பின் பேரில் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை இன்று 30.01.2026 காலை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம்.


இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல், அரசாணை 243 தொடர்பான திருத்தங்கள், ரூ.5400 தரஊதிய பாதிப்பு களைதல், பி.லிட்., பி.எட். ஊக்க ஊதிய உயர்வு தணிக்கைத்தடை நீக்கம், பி.காம்., எம்.காம்., பி.எட்., ஊக்க ஊதிய உயர்வு தடைநீக்கம், தொகுப்பூதிய காலம் காலமுறைப் பணிக்காலமாக்கி ஆணை வழங்குதல், 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி முடித்தோர் ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டிட்டோஜேக் பேரமைப்பிற்கு ஏற்பளித்தவாறு விரைந்து நிறைவேற்றக் கேட்டுக்கொண்டோம்.


தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும், மாநாட்டிற்கு முன்பாகவோ, மாநாட்டில் அறிவிக்கும் வகையிலோ ஆவண செய்வதாக உறுதி அளித்தார். தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காண வலியுறுத்தினோம். பிப்ரவரி 2 முதல் டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சென்னையில் 1 வார காலம் தங்கி, கோரிக்கைகளுக்கான ஆணை பெறுவதற்கு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.



1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி