10, 12-ம் வகுப்பு தேர்வு: சென்னையில் பிப்.16-ல் ஆய்வுக் கூட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2026

10, 12-ம் வகுப்பு தேர்வு: சென்னையில் பிப்.16-ல் ஆய்வுக் கூட்டம்


தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 2-ல் தொடங்கி ஏப்​.6-ம் தேதி வரை நடை​பெற உள்​ளன. இதற்​கான ஏற்​பாடு​களை தேர்​வுத் துறை மேற்​கொண்டுள்ளது.

பிளஸ் 2 வகுப்​பு செய்​முறைத் தேர்​வு​கள் இன்று முடிவடைகின்​றன. தொடர்ந்​து, 10-ம் வகுப்​புக்கு 23 முதல் 28-ம் தேதி வரை செய்​முறைத்தேர்​வு​கள் நடக்கின்றன. இந்தச் சூழலில், பொதுத் தேர்​வுக்​கான ஏற்​பாடு​கள் குறித்த ஆய்​வுக் கூட்​டம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலை​மை​யில் சென்​னை​யில் 16-ம் தேதி நடை​பெற உள்​ளது.

துறைச் செயலர் சந்​திரமோகன், இயக்​குநர் கண்​ணப்​பன் உள்​ளிட்ட அதி​காரி​கள், அனைத்து முதன்மை மற்​றும் மாவட்​டக் கல்வி அலு​வலர்கள் பங்​கேற்​கின்​றனர்.

பொதுத் தேர்வு விடைத்​தாள், வினாத்​தாள் கட்​டுக்​காப்பு மையங்​கள் மற்​றும் தேர்வு மையங்​களில் அடிப்​படை வசதி​கள், பாது​காப்​பு, கண்​காணிப்பு அலு​வலர்​கள் நியமனம் உள்​ளிட்ட அம்​சங்​கள் குறித்து இ​தில் ஆலோ​சிக்​கப்பட உள்​ள​து.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி