பள்ளிதோறும் சிறப்புப் பயிற்றுநர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2026

பள்ளிதோறும் சிறப்புப் பயிற்றுநர்

 

சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு, ஏற்ற வகையில் பொருத்தமான கற்பித்தல் முறைகள், தகவமைக்கப்பட்ட கருவிகள், மதிப்பீட்டுச் செயல்பாடுகளைப் பயன்படுத்தி கற்றல் கலைத்திட்டத்தை அனைத்து மாணவர்களும் அணுகும்படியாக மாற்றுபவர்கள் சிறப்புப் பயிற்றுநர்கள்.

இவர்கள் உள்ளடக்கிய கல்வி வகுப்பறையில் பொது ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். புலன் குறைபாடுடையோர், அறி வாற்றல் குறைபாடுடையோர், கற்றல் குறைபாடுடையோர், ஒன்றுக்கு மேற் பட்ட குறைபாடுகள் உடையோர் எனத் தமிழ்நாட்டில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு மாணவர்கள் பயில் கின்றனர். இவர்களுக்கான கற்பித்தல், சிறப்புப் பயிற்றுநர்கள் இல்லாமல் முழுமையடையாது.

பள்ளிதோறும் சிறப்பு சிறார்: இந்திய மறுவாழ்வு அமைப்பினால் (Rehabil itation Council of India) அங்கீகரிக்கப்பட்ட சிறப்புக் கல்வியியல் பட்டம் (B.Ed. Special Education) பெற்றவர்கள் மட்டுமே இந்தியாவில் சிறப்புப் பயிற்றுநர்களாகப் பணியாற்ற இயலும். இவர்கள் மறுவாழ்வு நிபுணர்களுக்கான (Central Rehabilitation Registrar-CRR) பதிவேட்டில், பதிவு செய்து நடைமுறையில் பதிவு எண் கொண்டவராக இருப்பது அவசியம்.

இவர்கள் பார்வைக் குறைபாடு, கேட்டல் குறைபாடு, அறிவுத் திறன் குறைபாடு, ஆட்டிசம், கற்றல் குறைபாடு, ஒன்றுக்கும் மேற்பட்ட குறை பாடுகள் (Multiple Disabilties) என ஏதேனும் ஒரு துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் உள்ளடக்கிய கல்வி செயல் படுத்தப்படுகிறது. ​இதன் கீழ் சிறப்புப் பயிற்றுநர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மண்டலத்தில் 30 பள்ளிகள் ஒதுக்கப்பட் டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 5 முதல் 25 சிறப்புக் குழந்தைகள் உள்ளனர்.

பணிச்சுமை: சிறப்புப் பயிற்றுநர்கள் அதிகப் பணிச்சுமையால், ஒரு குறிப்பிட்ட மாணவரை மீண்டும் சந்திக்கக் குறைந்தது ஒரு மாதமாகிறது. இது உள்ளடக்கிய கல்வியின் அர்த்தத்தையே நீர்த்துப்போக வைக்கிறது.

இவர்கள் மாற்றுத்திறன் உடையோருக்கான தனித்துவமான அடையாள அட்டை பெறுவதில் இருந்து அரசின் திட்டங்களைக் கொண்டுசேர்த்தல் என அனைத்து மட்டத்திலும் பணியாற்றுகின்றனர். இதனால் கற்பித்தல் பணியைத் திறம்படச் செய்ய இயலாத சூழலே காணப்படுகிறது.

பொதுப் பள்ளிகளில் சிறப்புப் பயிற்றுநர் களுக்கான மாணவர்-ஆசிரியர் விகிதம் ஆரம்ப நிலைக்கு 10:1, உயர் ஆரம்ப நிலைக்கு 15:1 இருக்க வேண்டுமெனக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE) வலியுறுத்துகிறது. இதன்படி தமிழ் நாட்டுக்கு 13,000 சிறப்புப் பயிற்றுநர்கள் தேவைப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில், இந்திய மறுவாழ்வு அமைப்பி னால் அங்கீகரிக்கப்பட்ட 16 கல்வி நிறுவனங்களில் வருடத்துக்கு 700 பேர் சிறப்புக் கல்வியியல் பட்டம் பெறுகின்றனர். மேலும் சிறப்புக் கல்வி ஆசிரியர் பயிற்சி 1980களிலிருந்து வழங்கப்பட்டுக் குறிப்பிடத்தகுந்த அளவிலான சிறப்புக்கல்விப் பயிற்றுநர்கள் உருவாக்கப் பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு சிறப்புப்பள்ளிகளைத் தவிர்த்து பொதுப் பள்ளிகளில் உள்ளடக்கிய கல்வியின்கீழ் 1,649 சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்று கின்றனர். இவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிசெய்வது, போதிய அளவிலான சிறப்புப் பயிற்றுநர்களுக்கான நிரந்தரப் பணியிடங்களை உருவாக்குவதே சிறப்புக் குழந்தைகளின் கல்வி வாய்ப்பினை உறுதிசெய்யும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி