தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்த ஆண்டு கனடாவுக்கு கல்விச் சுற்றுலா: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2026

தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்த ஆண்டு கனடாவுக்கு கல்விச் சுற்றுலா: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

 

அரசுப் பள்ளி மாணவர்கள் அடுத்த ஆண்டு கனடாவுக்கு கல்​விச் சுற்​றுலா அழைத்​துச் செல்​லப்​படு​வார்​கள் என்று அமைச்​சர் அன்​பில் மகேஸ் தெரி​வித்​தார்.

இதுகுறித்து சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி நேற்று கூறிய​தாவது: தற்​போது சட்​டப்​பேர​வைத் தேர்​தல் காலம் என்​ப​தால் பல்​வேறு பணி​கள் இருக்​கின்​றன.

பள்​ளிக்​கல்​வித் துறை​யில் பாடத்​திட்ட மாற்​றப் பணி​கள் இருப்​ப​தா​லும், இந்த முறை என்​னால் மாணவர்​களு​டன் கல்​விச் சுற்​றுலா​வுக்கு வெளி​நாடு செல்ல முடிய​வில்​லை.

அதனால் 40 பள்ளி மாணவர்​களு​டன் சேர்ந்து 4 ஆசிரியர்​கள், அதி​காரி​கள் மலேசி​யா​வுக்கு செல்​கின்​றனர். ஏற்​கெனவே இங்​கிருந்து சென்று மலேசி​யா​வில் தங்கி படித்து வரும் 17 மாணவர்​களை​ சந்திப்பார்கள்.

அங்​குள்ள நூல​கத்​தை​யும், பல்​கலைக்​கழகத்​தை​யும் பார்வையிட்டு, மலேசி​யா​வின் பண்​பாட்டு தொடர்​பான விஷ​யங்​களை​யும் தெரிந்து கொள்வார்கள். மேலும், தொழில் நிறு​வனத்தை நடத்​துபவர், தொழில் முனை​வோரை சந்​தித்​தல் போன்​றவற்​றில் பங்​கேற்க உள்​ளனர். எல்லா மாணவர்​களுக்​குள்​ளும் ஒரு தனித் திறன் இருக்​கும்.

அவர்​களை மேலே கொண்டு வரும் வகையி​லான கல்​விச் சுற்​றுலா​வாக இது இருக்​கும். அதே​போல், கனடா​வில் இருந்து இங்கு வந்​துள்ள பார்​வை​யாளர்​கள், தமிழக மாணவர்​களை அந்த நாட்​டுக்கு அனுப்பி வைக்க வேண்​டுமென கோரிக்கை வைத்​துள்​ளனர். அதன்​படி, அடுத்த ஆண்​டில் தமிழக பள்ளி மாணவர்கள் கனடா செல்​வார்​கள்.

செய்முறைத் தேர்வு: செய்​முறைத் தேர்​வு​கள் தற்​போது தொடங்​கி​யுள்​ளன. மாணவர்கள் பதற்​றமின்றி உற்​சாக​மாக தேர்​வு​களை எழுதி வரு​கின்​றனர். உறு​தி​யளிப்பு ஓய்வூதிய திட்​டத்தை பலர் விமர்​சனம் செய்​கின்​றனர். அந்த கோரிக்கை நிறைவேற்ற முடி​யாது என்ற நிலை​யில் நாங்​கள் அதை செய்து காட்​டி​யுள்​ளோம். அதை தாங்​கிக் கொள்ள முடி​யாதவர்​கள் தான் விமர்​சிக்​கின்​றனர்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி