வந்தே மாதரம்’ தேசியப் பாடலின் 6 சரணங்களும், தேசிய கீதம் ‘ஜன கண மன’ பாடல் பாடுவதற்கு முன்னதாக பாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ஜனவரி 28-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ‘அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்துக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களும் கட்டாயம் பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும்.
பாடல் இசைக்கப்படும் நேரம் தோராயமாக 3 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆகும். குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட வேண்டும்.
அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் ஒலிக்கப்பட வேண்டும். அதிகாரப்பூர்வ பதிப்பு மட்டுமே பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும். தேசியப் பாடலான வந்தே மாதரம் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க மரியாதை செலுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி