விலையில்லாச் சீருடை வழங்கும் திட்டம் - விவரங்களை EMIS portalல் உள்ளீடு (Yes or No) செய்ய அறிவுறுத்துதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2026

விலையில்லாச் சீருடை வழங்கும் திட்டம் - விவரங்களை EMIS portalல் உள்ளீடு (Yes or No) செய்ய அறிவுறுத்துதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 

2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு 2025-2026 ஆம் விலையில்லாச் சீருடை வழங்கும் திட்டம் கல்வியாண்டில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவிகளுக்கு அடுத்த கல்வியாண்டிற்கு வழங்கும் சீருடைத் துணிகள் அளவீடு செய்தல் விடுபட்ட மாணவ / மாணவிகளின் விவரம் கல்வி மாவட்டம் மற்றும் பள்ளிகள் வாரியாக EMIS-லிருந்து பெறப்பட்டது EMIS portalல் உள்ளீடு (Yes or No) செய்ய அறிவுறுத்துதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

பார்வையில் காணும் EMIS இல் இருந்து பெறப்பட்ட மின்னஞ்சலின்படி, 2020-2027 ஆண்டிற்கு விலையில்லாச் சீருடை வழங்க அளவெடுக்கும் பணி மேற்கொள்ள ஏதுவாக, 2025-2026 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவ/மாணவிகளின் விவரங்கள் விடுபட்டுள்ளது எனவும், விடுபட்ட விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே. தொடக்கக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் அரசு / அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 7 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவ / மாணவிகளின் (இத்துடன் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள) விடுபட்ட விவரங்களை நாளை 24.02.2026 அன்று காலை 11.00 மணிக்குள் EMIS தளத்தில் உடனடியாக உள்ளீடு செய்யுமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.


மேலும் மேற்குறிப்பிட்ட பொருள் சார்ந்து EMIS portalல் உள்ளீடு (Yes or No) செய்யப்படாத கல்வி மாவட்டங்களை இணை இயக்குநர் (உதவி பெறும் பள்ளிகள்) அவர்கள் Google Meet மூலம் (25.03.2026 மாலை 3.00 மணியளவில்) ஆய்வு செய்வார் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.


இது மிகவும் அவசரம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி