School Morning Prayer Activities - 02.02.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2026

School Morning Prayer Activities - 02.02.2026

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.02.2026

திருக்குறள் 

குறள் 1002:

பொருளானாம் எல்லாமென்றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு

விளக்க உரை:

பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்."

பழமொழி :

A thief knows a thief.

பாம்பின் கால் பாம்பறியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பணத்தை விட அறிவே உயர்ந்தது

2. எனவே அறிவைப் பெருக்க அனைத்தும் படிப்போம்.

பொன்மொழி : 

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி உனக்கு  தானாகவே வந்து சேரும்.

            -  விவேகானந்தர்

பொது அறிவு : 

01.""தென் அமெரிக்காவின் சுவிட்சர்லாந்து"" (Switzerland of South America) என்று அழைக்கப்படும் நாடு எது?

        உருகுவே  -  Uruguay

02.உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வெப்ப நீரூற்றுகள் (hot springs) உள்ள நாடு 

எது? 

              ஜப்பான்-Japan

English words :

Greed - பேராசை

slander - அவதூறு

தமிழ் இலக்கணம்: 

 தேனீர் தேநீர் எது சரி? பிரித்து பார்க்கும் போது நமக்கு சரியான விடை கிடைத்து விடும். 
தேனீர் பிரித்தால் தேன்+ நீர் =  என்று வரும். தேன் நீர் என்பதின் பொருள் தேன் கலந்த நீர்.
தேநீர் இப்போது இதை பிரித்து பார்ப்போம். தேநீர் = தே+ நீர்
தே என்பதற்கு இறைவன், இனிமை, தேயிலை என்று மூன்று வகைப் பொருள் தரும். 
எனவே நமக்கு தேநீர் என்பது தான் சரியான வார்த்தை என்பது புரிந்து விட்டது.

அறிவியல் களஞ்சியம் :

உலகின் மர்ம பகுதிகளில் ஒன்றான மெக்சிகோவில் 'மௌன மண்டலம்' உள்ளது. இங்கு சென்றால் மின்னணு கருவிகள் எதுவுமே வேலை செய்யாது. வானொலி சமிக்ஞைகளும் கிடைக்காது. இப்படி எதுவுமே கிடைக்காத பகுதியாக உள்ள இந்த இடத்தில் மர்மங்களை அவிழ்க்க பல ஆண்டுகளாக ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இன்று வரை விடை கிடைத்தபாடில்லை.

பிப்ரவரி 02

உலக சதுப்பு நில நாள் 

உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் நாளாகும். உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.
அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.

நீதிக்கதை

 நன்றி கொன்ற ஓநாய்

ஒரு நாள் அடர்ந்த காட்டில் ஓநாய் வாழ்ந்து வந்தது. அதற்கு வசமான மாமிச வேட்டை கிடைத்தது. ஆவலுடன் வேக வேகமாக இரையைத் தின்றது. அப்போது அதன் தொண்டையில் ஒரு எலும்பு சிக்கிக் கொண்டது. வலி பொறுக்க முடியாமல் ஊளையிட்டுக் கொண்டே அங்கும் இங்கும் ஓடியது. அப்போது ஒரு கொக்கு எதிரே வந்தது. அதனிடம் சென்ற ஓநாய் தனது தொண்டையில் மாட்டிக்கொண்ட எலும்பை எடுத்தால் தன்னிடம் உள்ள ஏராளமான பொன்னையும் பொருளையும் தருவதாக ஆசை வார்த்தை கூறி, உதவும்படி மிகவும் கெஞ்சியது. 

ஓநாயின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய கொக்கு உதவ முன் வந்தது. தனது நீண்ட அலகை ஓநாயின் வாய்க்குள் விட்டு எலும்பை எடுத்தது. சொன்னபடி பரிசு தரும்படி கொக்கு கேட்டது. பரிசா! உனக்கு... நான் தருவதா? என்று ஏளனமாகச் சிரித்தது ஓநாய். மேலும் உன் கழுத்தைக் கடித்துக் கொல்லாமல் உயிருடன் உன்னை விடுவதே பெரிது. மரியாதையாக இந்த இடத்தை விட்டு ஓடி விடு என்று விரட்டியடித்தது. நன்றியில்லாத ஓநாய்க்கு உதவியது பாவம் என்று எண்ணிக்கொண்டே கொக்கு தன் வழியே சென்றது. 

நீதி :

ஆபத்தில் உதவியவனை அலட்சியப் படுத்தக்கூடாது.

இன்றைய செய்திகள்

02.02.2026

⭐திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் -மு.க.ஸ்டாலின்

⭐கேரளாவில் அரசு & அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் இளநிலைப் படிப்புகளை பயிலும் மாணவர்களுக்கு இனி கல்விக் கட்டணம் இல்லை என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

⭐காங்கோ நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

⭐'பிராந்திய போர் வெடிக்கும்' அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்!

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இளம்வயதில் 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கார்லோஸ் அல்காரஸ் வென்று சாதனை.

🏀இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்த்து.46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.

Today's Headlines

⭐M.K. Stalin has announced that the Thiruvottriyur Highway will be named as Vallalar Highway.

⭐The Kerala state government has announced that there will no longer be any tuition fees for students pursuing undergraduate courses in Arts and Science in government and government-aided colleges in Kerala.

⭐ 200 workers died in the Congo gold mine due to the sand slide 

⭐ Iran  warned  US that there will be regional war.

 *SPORTS NEWS*

🏀Australian Open Tennis: Alcaraz beats Djokovic to win championship. Carlos Alcaraz wins 7 Grand Slam titles at a young age.

.🏀The 5th and final T20 match between India and New Zealand was played in Thiruvananthapuram. India won the T20 series 4-1. by 46 runs

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி