ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025 ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I 15.11.2025 அன்றும் தாள்-II 16.11.2025 அன்றும் நடத்தப்பட்டது.
அடிப்படையில் OMR அரசாணை (நிலை) எண். 23 பள்ளிக் கல்வித் (TRB) துறை நாள்:28.01.2026 ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்கள் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் 30.01.2026 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தகுதி பெற்ற தேர்வர்களுக்கு 02.02.2026 பி.ப முதல் தகுதிச் சான்றுகள் (e-certificate) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசாணை (நிலை) எண் : 46 பள்ளிக் கல்வித் (TRB) துறை நாள் : 25.02.2026 ல் மாற்றுத்திறனாளி (PWD Candidate) தேர்வர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 40% என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வரசாணையில் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை 6103/2025 வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் பொருந்தும் எனத் நாள்:11.08.2025ன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட அரசாணையின் அடிப்படையில் மாற்றுத் திறனாளி (PWD Candidate) தேர்வர்களுக்கு TET தேர்வில் தகுதி பெறுவதற்கு குறைந்தப்பட்ச மதிப்பெண்கள் 60 (or) 40% என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த மாற்றுத்திறனாளி என்ற விவரத்தின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. மேலும், தகுதி பெற்ற தேர்வர்கள் தங்களது தகுதிச் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) 28.02.2026 முற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி