10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் வழிமுறைகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2026

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் வழிமுறைகள் வெளியீடு

 

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் பின்பற்ற வேண்டிய கூடுதல் வழிமுறைகளை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்புக்கு மார்ச் 11-ம் தேதி முதல் தேர்வு தொடங்குகிறது. பொதுத்தேர்வு மையங்களை மேற்பார்வையிடுவதற்காக முதன்மைக்கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் வினாத்தாள்களை பாதுகாத்தல், தேர்வறை, சிசிடிவி கண்காணிப்பை உறுதிசெய்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில், முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு கூடுதலாக சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்

பட்டுள்ளன. அதன்படி, தேர்வு மையத்தில் பணிபுரியும் முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர், நிலையான படை உறுப்பினர், துறைஅலுவலர் உட்பட அனைத்து பணியாளர்கள் நியமன ஆணையை ஆய்வு அலுவலர் கேட்கும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

செல்போன் பயன்பாட்டு உறுதிமொழி சான்று தேர்வு முடிந்த பின்னர் பெறப்பட வேண்டும். அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அன்றைய தேர்வுக்கான பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களாக இல்லாததை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

மாணவர் உடல்நலன்: தேர்வெழுதும் மாணவருக்கு அம்மைநோய் இருப்பின், அவர் தேர்வெழுத தனியாக ஒரு அறையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் அதில் கூறப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி