2022-2024-ம் ஆண்டு பிஎட் முடித்தோருக்கு ஏப்.1, 2-ல் சான்றிதழ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2026

2022-2024-ம் ஆண்டு பிஎட் முடித்தோருக்கு ஏப்.1, 2-ல் சான்றிதழ்

 

2022-2024-ம் ஆண்டு பிஎட் முடித்தோருக்கு ஏப்.1, 2-ல் சான்றிதழ்


பிஎட் முடித்​தோருக்​கான பட்​டச்​சான்​றிதழ் ஏப்​ரல் 1 மற்​றும் 2-ம் தேதி விநி​யோகிக்​கப்​படும் என ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகம் தெரி​வித்​துள்​ளது.


கல்​வி​யியல் கல்​லூரி​களில் கடந்த 2022-2024-ம் ஆண்டு பிஎட் படித்து முடித்த மாணவர்​களுக்​கான பட்​டச்​சான்​றிதழ் மார்ச் 26 மற்​றும் 27-ம் தேதி மாவட்ட வாரி​யாக கல்​வி​யியல் கல்​லூரி​களுக்கு விநி​யோகிக்​கப்​படும் என தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகம் அறி​வித்​திருந்​தது. பின்​னர் நிர்​வாக காரணங்​களால் சான்​றிதழ் விநி​யோகம் தள்​ளிவைக்​கப்​பட்​டது.


இந்​நிலை​யில், பிஎட் பட்​டச்​சான்​றிதழ்​கள் ஏப்​ரல் 1 மற்​றும் 2-ம் தேதி கல்​வி​யியல் கல்​லூரி​களிடம் வழங்​கப்​படும். கல்​வி​யியல் கல்​லூரி நிர்​வாகத்​தினர் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட நாளில் தகு​தி​யான பிர​தி​நி​தியை பல்​கலைக்​கழகத்​துக்கு அனுப்பி பெற்​றுக்​கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளனர்.


ஒரு​வேளை குறிப்​பிட்ட நாளில் வர இயலா​விட்​டால் அடுத்த வேலை நாள் அன்று வந்து சான்​றிதழ்​களை பெற்​றுக்​கொள்​ளலாம் என ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழக தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் (பொறுப்​பு) பி.கணேசன் அனைத்து கல்​வி​யியல் கல்​லூரி​களின் முதல்​வர்​களுக்​கும் (தன்​னாட்சி கல்​லூரி​கள் தவிர) தகவல் அனுப்​பியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி