பிளஸ் 2 பொதுத்தேர்வில் வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன. இத்தேர்வை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 7.91 லட்சம் மாணவர்கள் எழுதினர். 10,159 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘வேதியியல் வினாத்தாளில் 1, 5 மதிப்பெண் பகுதிகளில் சில கேள்விகள் கடினமாக இருந்ததால் பதில் அளிப்பது சிரமமாக இருந்தது. பல்வேறு எதிர்பாராத கேள்விகள் கேட்கப்பட்டதால் இந்தாண்டு வேதியியல் பாடத்தில் தேர்ச்சி மற்றும் ‘சென்டம்’ பெறும் மாணவர்கள் எண்ணிக்கை சற்று குறையக்கூடும்.
கணக்குப்பதிவியல் எளிது: அதேநேரம் கணக்குப் பதிவியல் வினாத்தாள் எளிதாக இருந்தது. 1, 2, 3, 5 மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற பெரும்பாலான வினாக்கள் எளிதாக இருந்தன. மெல்லக் கற்கும் மாணவர்கள்கூட அதிக மதிப்பெண் பெறும் அளவுக்கு வினாத்தாள் இருந்தது.
இதனால், நூற்றுக்கு நூறு மதிப்பெண்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’’ என்றனர்.
இயற்பியல், பொருளியல் மற்றும் வேலைவாய்ப்புத் திறன் பாடத் தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதியுடன் முடிய உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 8-ல் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி