எம்டெக் செமிகண்டக்டர் டெக்னாலஜி உட்பட புதிதாக 4 முதுநிலை பட்டப் படிப்புகள்: சென்னை ஐஐடி அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2026

எம்டெக் செமிகண்டக்டர் டெக்னாலஜி உட்பட புதிதாக 4 முதுநிலை பட்டப் படிப்புகள்: சென்னை ஐஐடி அறிமுகம்

 

எம்டெக் செமிகண்​டக்​டர் மெட்​டீரியல்ஸ் டெக்​னாலஜி, எம்டெக் ரொபோட்​டிக்ஸ் உட்பட புதி​தாக 4 முதுநிலை பட்​டப் படிப்​பு​களை சென்னை ஐஐடி இந்த ஆண்டு அறி​முகப்​படுத்​துகிறது.

இது தொடர்​பாக ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: மாறிவரும் தொழில்​நுட்ப சூழலுக்கு ஏற்ப சென்னை ஐஐடிபுதிய படிப்​பு​களை அறி​முகப்​படுத்தி வரு​கிறது.

அந்த வகை​யில், தற்​போது தொழில்​நுட்​பம், உற்​பத்​தி, ஆளுமை ஆகிய துறை​களில் தேவை​யான மனிதவளத்தை உரு​வாக்​கும் வகை​யில் எம்ஏ (பொது கொள்​கை), எம்டெக் செமிகண்​டக்​டர் மெட்​டீரியல்ஸ் டெக்​னாலஜி, எம்டெக் மெக்​கானிக்​கல் இன்​ஜினியரிங், எம்டெக் ரொபோட்​டிக்ஸ் ஆகிய 4 புதிய முதுநிலை பட்​டப் படிப்​பு​களை இந்த ஆண்டு அறி​முகப்​படுத்​துகிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

அதிக தேவை உள்ளது

புதிய படிப்​பு​கள் அறி​முகப்​படுத்​தப்​படு​வது குறித்து ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி கூறும்​போது, “தொழில் துறை​யினரின் தேவை​களை​யும் நாட்​டின் தொழில்​நுட்​பத் தேவை​களை​யும் பூர்த்தி செய்​யும் பணியை ஐஐடி தொடர்ந்து செய்து மேற்​கொண்டு வரு​கிறது.

அந்த வகை​யில், வளர்ந்து வரும் துறை​களுக்கு தேவைப்​படும் நிபுணர்​களை உரு​வாக்​கும் நோக்​கில் புதி​தாக இந்த 4 முதுநிலை படிப்​பு​களை இந்த ஆண்டு தொடங்​கு​கிறோம். இந்த படிப்​பு​களுக்கு அகில இந்​திய அளவில் மாணவர்​கள் சேரலாம்” என்​றார்.

ஐஐடி உலோக​வியல் மற்​றும் மெட்​டீரியல் இன்​ஜினியரிங் துறை​யின் தலை​வர் வி.சுப்​ரமணிய சர்மா கூறுகை​யில், “இந்​திய செமிகண்​டக்​டர் இயக்​கத்​துக்கு செமிகண்​டக்​டர் தொழில்​நுட்ப அறிவு கொண்ட நிபுணர்​கள் அதி​கள​வில் தேவைப்​படு​கின்​றனர்.

இதைக் கருத்​தில்​கொண்​டு, எம்டெக் செமிகண்​டக்​டர் மெட்​டீரியல்ஸ் டெக்​னாலஜி படிப்​புக்​கான பாடத்​திட்​ட​மானது செமிகண்​டக்​டர் துறை​யின் தேவையை​யும் செமிகண்​டக்​டர் நிபுணர்​களை உரு​வாக்​கும் நோக்​கத்​தை​யும் பூர்த்தி செய்​யும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி