தொடக்கப் பள்ளிகளில் பயிலும் அறிவுசார் குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அறிவுசார் குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்றலில் அவர்கள் நிலைக்கேற்ப அரும்பு, மொட்டு, மலர் மற்றும் அனைத்து பாடங்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி ஏடுகள், ஆசிரியர் கையேடுகள் ஆண்டு இறுதித் தேர்வுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த மாணவர்களுக்கு முதன்முதலாக ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அளிக்கப்படவுள்ளது. இந்த வினாத்தாளை அறிவுசார் குறைபாடுகள் கொண்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வழங்கி மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்க வேண்டும்.
இந்த வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டிய மாணவர்கள் விவரப் பட்டியலை சம்பந்தப்பட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். தேவையெனில் இதுதொடர்பாக சார்ந்த பள்ளியின் சிறப்பு பயிற்றுநர் ஆசிரியர்களுக்கு உதவலாம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி